பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதற் பாட்டு

3


பாட்டு, தொகை, கீழ்க்கணக்கு என்று இவற்றை முறையாக எடுத்து சொல்வார்கள். இந்த நூல்கள் முப்பத்தாறும் கடைச்சங்க காலத்து நூல்கள் என்று இப்போது வழங்கப்படுகின்றன. பழங்காலத்து நாகரிகம் எப்படி இருந்தது. தமிழர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள். அவர்களுடைய பழக்கவழக்கங்கள் எவையெவை என்பன போன்ற பல செய்திகளே இந்த முப்பத்தாறு நூல்களிலிருந்தும் தெரிந்துகொள்ளலாம்.

பத்துப் பாட்டு

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்று முறையாகச் சொல்வது ஒரு வழக்கம். இந்த மூன்று வரிசைகளில் முதல் வரிசையாக அமைந்திருப்பது பத்துப்பாட்டு. அந்தப் பெயரே பத்துப் பாடல்களை உடைய தொகுதி அது என்பதைத் தெரிவிக்கிறது அல்லவா? பத்து நெடிய பாடல்களையுடைய அந்தத் தொகுதியில் ஐந்து பாடல்கள் ஆற்றுப்படைகள், ஒருவனே ஒரு புரவலனிடத்தில் போகும்படியாகச் சொல்வது ஆற்றுப்படை. திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணற்ட்றுப்படை, சிறுபாணுற்றுப்படை, மலைபடுகடாம் அல்லது கூத்தராற்றுப்படை என்ற ஐந்து ஆற்றுப் படைகள் பத்துப்பாட்டில் இருக்கின்றன. சரிபாதி ஆற்றுப் படைகளால் அமைந்த தொகுதி அந்தப் பத்துப்பாட்டு. அதில் முதல் பாட்டாக நிற்பது திருமுருகாற்றுப்படை.

முதலில் வைத்தது ஏன்?

தமிழர்களுக்கு எப்போதுமே கடவுள் பக்தி மாறாமல் இருந்து வருகிறது நூல்களைப் பாடும் காலத்தில் அந்த