பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 56 - திருமுருகாற்றுப்படை விளக்கம் . மேலே சொன்ன இரண்டு கைகளையும் அருணகிரி காதர் புயவகுப்பில் பாராட்டுகிருர். 'வசைதவிர் ககன சரசிவ கரண மகாவ்ருத சீல சால வரமுனி சித்தரை அஞ்சல் அஞ்சல் என்று வாழ்வித்து நின்றன: மணிவட மழலை உடைமணி தபனிய நாண் அழகாக நாடி வகைவகை கட்டு மருங்குடன் பொருந்து ரீதிக் கிசைந்தன.” வசை சிறிதும் இன்றி நீங்கினவர்களும், வானத்தில் சஞ்சரிப்பவர்களும், பசுகரணம் நீங்கிப் பதிகரணம் பெற்ற வர்களும், மிக்க பெரிய விரதங்களை அநுஷ்டிப்பவர்களும், அருங்குணத் (தொகுதியையுடையவர்களும், மேலான முனிவர்களுமாகிய சித்தர்களே, நீங்கள் அஞ்சவேண்டாம்: அஞ்ச வேண்டாம்" என்று குறிப்பித்து அவர்களே வாழச் செய்து சிற்பவை, மணிகளின் வடங்களோடு கூடிய இனிய ஒலியையுடைய உடைமணி யென்னும் ஆபரணத்தையும் பொன் அரைஞாணையும் அழகாகத் தெரிந்து வகை வகை யாகக் கட்டும் திருவிடையுடனே சேர்ந்து விளங்கும் அழகு முறைக்குப் பொருந்தி அமைந்தவை என்பது இதன் பொருள். திருமுருகாற்றுப்படையில் வரும் செய்தியையே சந்த அழகு ததும்ப அருணகிரி நாதர் அருளுகிருர். இங்கே. 'விண் செலல் மரபின் ஐயர் பல பல சிறப்புகளுடன் கூடி, வசை தவிர் ககன சரசிவ கரண மகாவ்ருத சீல சால வரமுனி சித்தர் ஆக விளங்குகிருர்கள். திரு முருகாற்றுப்படையில் வரும் வெறும் உக்கமாகிய திருவிடை இங்கே, மணிவட மழலை உடைமணி ಹLಿಗಿಲ್ಯ ாைண் அழகாக காடி வகை வகை கட்டும் மருங்கு