பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கரங்கள் - - 157 ஆகிறது. முன்னவர் பூட்டிய அணிகளோடு பின் வருவோர் பூட்டிய அணிகளேயும் அணிந்து, ஒரு குழந்தை அழகிலும் சிறப்பிலும் மிக்க கலம் பெற்று விளங்குவதுபோல இருக்கி றது. இந்தக் காட்சி யானையைச் செலுத்தும் கைகள் முத்ல் முகத்துக்கு ஏற்ற வகையில் செயலாற்றும் இரண்டு கைகளைப்பற்றிக் கூறிய நக்கீரர் மேலே இரண்டா வது திருமுகத்துக்கு இணையாக உள்ள இரண்டு கைகளின் சிறப்பைக் கூற வருகிருர். அந்த முகம், "ஆர்வலர் ஏத்த அமர்ந்தினிது ஒழுகிக் காதலின் உவந்து வரங்கொடு த் தன்றே" என்று கூறியபடி பக்தர்களுக்கு வரம் கொடுக்கும் தன்மையை உடையது. முருகன் பேரருளாளன். அவன் தன்னுடைய அன்பர்களுக்கு மிக மிக எளியணுக கின்று. அருள்புரியும் கருணுகிதி. அன்பர்கள் தன்னை அணுகிப் பணிந்து போற்றி வழிபட அருள் செய்வது பெரிது அன்று. அன்பர்களேத்தானே காடிச்சென்று அவர்களுக்கு இன்னருள் பாலிக்கும் இயல்புடையவன் முருகன். தன் அன்பர்களின் அபயக்குரல் கேட்பதற்கு முன்பே அவர்களே காடிச் சென்று. அருள்புரிகிறவன். போலீஸ்காரர்களுக்கும் டாக்டர்களுக்கும் இன்ன நேரங்தான் வருவார்கள் என்ற வரையைறயிருந்தால் அவர் களால் மக்களுக்கு மிகுதியான பயன் உண்டாகாது. எப் போது அழைத்தாலும் அவர்கள் சென்று உதவ வேண்டும். அதல்ை மற்றவர்களுக்கு வாகனம் இருந்தாலும் இல்லா விட்டாலும் அவர்களுக்கு அவசியம் வேண்டும். மிக விரைவில் சென்று தங்கள் கடமையை ஆற்றப்ப+ அவர் களுக்கு வசதி இருக்கவேண்டும். -