பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 திருமுருகாற்றுப்படை விளக்கம் முருகன் அமராவதி காவலன்; உலகத்தையே காப்ப வன். அசுரர்களால் வரும் இடர்களைப் போக்க அவன் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிருன். அவனைப் போன்ற பெரிய போலீஸ்காரன் யாரும் இல்லை. போலீஸ்காரனப் போலவே அவன், 'சதுக்கமும் சந்தியும்' விற்பவன். பெரிய சேனபதியல்லவா? "சேனைத் தலைவர்களுள் கான் முருகளுக இருக்கிறேன்' என்று கண்ணன் கீதையில் அருளியிருக்கி ருன். ஆகவே, அவன் விரைவிலே சென்று மக்களுக்கு அருள்புரிவதற்கு ஏற்ற வாகனங்களைக் கொண்டிருக்கிருன். 艇 முருகன் சிறந்த மருத்துவன்; பவரோக வயித்திய காதப் பெருமாள் அவன். வேறு எந்த மருந்தாலும் திராத பிறவிப்பிணி அவனுடைய திருவருளால் போய்விடும். எந்தச் சமயத்தில் நோயாளிக்கு அபாய கிலே ஏற்பட்டாலும் உடனே சென்று ஆவன புரிவது டாக்டரின் கடமை. மிகவும் விரைவிலே சென்று நோயாளியைக் கவனிக்க வேண்டும். அதனால்தான் சிறிய டாக்டராக இருந்தாலும் கார் வைத்துக் கொண்டிருக்கிருர். புகழ் பெற்று வாழ்ந்த டாக்டர் ரங்காசாரியர் அந்தக் காலத்தில் விமானத்தில் பறந்து சென்று கோயாளிகளுக்கு கலம் செய்தார். முருகளு கிய வைத் தியனும் தன் அன்பர்களேப் பாதுகாக்க விரையும் கருணைக்கடவுள். அவன் விரைவுக்கு ஏற்றபடி வாகனங்களே வைத்திருக்கிருன். எப்போது அழைத்தாலும் வருகிறவன் அவன். அதற் காகவே வேகமாகச் செல்லும் வாகனத்தைக் கொண் டிருக்கிருன். 'நீலச் சிகண்டியில் ஏறும் பிரான் எந்த நேரத்திலும் கோலக் குறத்தி யுடன் வருவான்' என்று அருணகிரிநாதர் பாடுவார்.