பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கரங்கள் - 159 "சுப்பிரமணிய சுவாமி மயில் வாகனத்தில் இருக்கிற மாதிரி' என்று ஒரு பழமொழி உண்டு. அதற்குத் தவருகப் பொருள் கூறுவர் சிலர். அது முருகனுடைய கருணைச் சிறப்பைப் புலப்படுத்துவது. முருகன் தன்னே எந்தப்பக்தன் எப்போது கூட்பிடுவானே என்று எண்ணி எப்போதும் மயில் வாகனத்தில் வீற்றிருக்கிருன். மயிலே அழைத்து வரச்செய்து அதற்குக் கடிவாளம் முதலியவை பூட்டச் செய்து பிறகு ஆரோகணித்துச் செல்வதற்கு நேரமாகும் அல்லவா? ஆகவே அவன் எப்போதும் அடியார்களுக்கு அருள் செய்வதற்குச் சித்தகை மயிலின்மேல் எழுந்தருளிய கோலத்தில் இருக்கிருன், இதுவே அந்தப் பழமொழியினால் அறிவதற்குரியது. அடியவர்கள் தம்முடைய முயற்சி ஒன்றினலேயே அவனுடைய திருவருளேப் பெற இயலாது. அவன் அவர்களே ஆட்கொண்டருள வேண்டும் என்ற வேகம் உடையவகை இருக்கிருன் அவன் இருக்கும் இடத்துக்குச் சென்று அவனே நாம் தரிசிப்பதென்பது இயலாத காரியம். நாம் எந்த முயற்சியும் செய்யாமல் அவனே நம்மிடம் வந்தால், அவன் அருமையை நாம் உணரமாட்டோம். ஆதலால் நாம் ஒரளவு முயற்சி செய்தால் இறைவன் ஓடிவந்து நம்மை அணேத்து அருள் புரிவான். காம் பலகாலமாக அழுந்தியிருக்கும் பிர பஞ்சச் சேற்றை விட்டுவிட்டுப் புறப்படவேண்டும். காம் மெய்யன்போடு முயற்சியில் தலைப்பட்டோம் என்பதை முருகன் உணர்ந்து நம்மை ஆட்கொள்ள வேகமாக வரு வான்: நம்மை இடைவழியிலே சந்திப்பான். அவன் இருக்குமிடம் சென்று பார்ப்பது ஒரு வகை: அவன் நம்மிடம் வருவது ஒரு வகை. முதலாவது இயலாத காரியம்; இரண்டாவது அருமையை உணராத நிலையை