பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கரங்கள் - 161 கலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது ஒருகை, அங்குசம் கடாவ ஒருகை என்று இந்தக் கைகளின் செயல்களைக் கூறுகிருர் நக்கீரர். - "அழகு பெற்ற செவ்வாடையையுடைய துடையின் மேல் தங்கியது ஒரு கை, அங்குசத்தைச் செலுத்துவதற் காக அமைந்தது ஒரு கை' என்பது இதன் பொருள். "இஃது யானே ஏறுவார்க்கு இயல்பென்று கூறினர். தன்னே லழிபடுவாரிடத்து வருங்கால் யானே மேல் வந்து அருள் செய்தல் இயல்பாதலின், இக் கைகள் காதலின் உவந்து வரம் கொடுத்த முகத்திற்கு ஏற்றவாறு உணர்க' என்று கச்சினர்க்கினியர் எழுதுவர். முருகன் சிவந்த திருமேனி உடையவன்; சிவந்த ஆடையை அணிந்தவன்; 'செய்யன் சிவந்த ஆடையன்' என்று பின்னே வருகிறது. . 'பவழத் தன்ன மேணித் திகழொளிக் குன்றி ஏய்க்கும் உடுக்கை' என்பது குறுந்தொகையில் உள்ள கடவுள் வாழ்த்து. "குன்றி மணியைப் போன்ற சிவந்த ஆடையை உடை யவன்' என்று அதிலிருந்து தெரிகிறது. - 'உடையும் ஒலியலும் செய்யை' என்பது பரிபாடல் முருகன் இடையில் அணிந்த உடை யும் சிவப்பு: மேலே அணிந்த ஆடையும் சிவப்பு. "குன்றியும் கோபமும் ஒன்றிய உடுக்கை' என்பது ஒரு பழம் பாடல், குன்றி மணியின் செக்கிறமும் இந்திரகோபப் பூச்சியின் செவ்வண்ண மும் இணைந்த சிவந்த திரு-11 .