பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 திருமுருகா ற்றுப்படை விளக்கம் ஆடையை முருகன் அணிந்திருக்கிருன் என்று அது சொல்கிறது. கலிங்கம் என்பது செவ்வண்ண ஆடைக்குப் பெயர்; அதை முருகன் அணிந்திருக்கிருன். அவனுடைய செம் மேனியில் பொருந்தி அது தனியழகைப் பெறுகிறது. முருகன் அணிந்திருப்பதனால் அது நலம் பெறுகிறது. ஆதலின் அதை, நலம்பெறு கலிங்கம் என்ருர். பிறருக்கு நலம் தரும் கலிங்கமாகிய அது. முருகல்ை கலம் பெறுகிற தாம். அதை அணிந்த துடையின்மேலே ஒரு கையை வைத்திருக்கிருன் முருகன். அதனேடு இணைந்த ஒரு கை அங்குசத்தை ஏந்தி யிருக்கிறது. முருகன் திருக்கரங்களில் உள்ள படைக் கலங்களில் அங்குசம் ஒன்று. முருகனுடைய தமையனர் கையிலும் தாயின் கையிலும் அங்குசம் உண்டு. முருகன் கஜவாகன மூர்த்தியாக எழுந்தருளும் போது அங்குசம் ஏந்தி வருகிருன். இந்த இரண்டு திருக்கரங்களேயும் பற்றி அருணகிரி நாதர் புய வகுப்பில் கூறுவதைப் பார்க்கலாம், ' வருணித கிரண அருணித வெகுதரு தைப சோதி ஆடை வடிவு பெறப்புனை திண்செழுங் குறங்கின் மேல்வைத் தசைந்தன; வளைகடல் உலகை வலம்வரு பவுரி விநோதக லாபகோப மயில்வத னத்துவி ளங்கும் அங்குசங்க டாவிச் சிறந்தன.” வருணிப்பதற்குரிய கிரணங்களோடு கூடியதும் சிவர்த நிறம் உடையதும் மிகவும் இளஞ்சூரியனுடைய வெயிலின் சோதி வீசுவதுமாகிய ஆடையானது அழகு பெறும்படி அதனைப் புனைந்த திண்ணிய செழிப்பான துடையின்மேல்