பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கரங்கள் - - 163 வைத்து அமைந்தவை; வளைந்த கடலே யுடைய உலகத்தை வலமாக வரும் கூத்தாகிய விளையாட்டையும் தோகை -யையும் உடைய மயில் வாகனத்தின் முகத்தைப்போல விளங்கும் அங்குசத்தைச் செலுத்திச் சிறப்புற்றவை' என்பது இதன் பொருள். இங்கே திருமுருகாற்றுப் படையில் சொல்லப்பெற்ற கலிங்கம், குறங்கு, அங்குசம் யாவும் வருகின்றன. அங்குசத்துக்கு உவமையாக மயிலின் முகத்தைச் சொன்னது, அருணகிரியார் கற்பனை. அடியவர்களுக்கு வரம் கொடுக்கும் கோலத்தோடு முருகன் யானே வாகனத்தின்மேல் எழுந்தருளி வருகிருன்; அப்போது ஒரு கை துடையின் மேல் இருக்க, மற்ருெரு கை அங்குச மென்னும் யானைத் தோட்டியைப் பிடித்து விளங்குகிறது. கலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது ஒருகை; - அங்குசம் கடாவ ஒருகை. படை ஏந்தும் கைகள் முருகன் திருக்கரத்திலுள்ள படைகளுக்குள் வேல் சிறந்தது. வேலவன் என்று முருகனக் குறிப்பிடும் வழக் கில்ை இது நன்கு புலகுைம். போரில் சிறந்து நிற்பது வேல். பழங்காலத்தில் படைகள் கான்கு வகைப்படும். அவற்றைச் சதுரங்க சேனை என்பார்கள். தேர், யானை, குதிரை, காலாள் என்னும் படைகள் அவை. அவற்றுள் சிறந்து சிற்பது யானைப்படை. யானையைக் கொல்வதற்கு அம்பும் வாளும் பயன்படா. வேலே யானையை எறி வதற்கு ஏற்ற படை. இதல்ை வேற்படை மற்ற