பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கரங்கள் 165 புகுவார் வலக்கையில் ஆயுதத்தையும் இடக்கையில் கேடயத் தையும் ஏந்தியிருப்பார்கள். ஆயுதம் எதிரியைத் தாக்குவ தற்கு கேடயம் எதிரியின் தாக்குதலினின்றும் பாதுகாப்ப தற்கு கேடயம் வட்டமாக இருப்பது. அதைக் கிடுகு,பரிசை, தோல் என்று சொல்வார்கள். கறுப்பாக அகன்று விரிந்து வட்டமாக இருப்பதால் அதனே நக்கீரர் ஐயிரு வட்டம்' என்று சொல்கிருர். "வியப்பையும் கருமையையும் உடைய பரிசை என்று கச்சினர்க்கினியர் உரை எழுதுகிருர். வேலும் கேடயமும் ஏந்தும் கைகளே, - இருகை. ஐயிரு வட்டமொடு எஃகுவலம் திரிப்ப என்று கக்கீரர் பாடுகிரு.ர். - 'இரண்டு கைகள் கேடயத்துடன் வேலாயுதத்தையும் வலமாகச் சுழற்ற' என்பது இதன் பொருள். இந்த இரண்டு கைகளும் மந்திர விதியின் மரபுளி வழாஅ, அந்தணர் வேள்வியோர்க் கும்மே ஒரு முகம் என்று சொன்ன திருமுகத்துக்குப் பொருந்தி அமைந்த கைகள். 'இதனனே, அசுரர் வந்து வேள்வியைக் கெடாமல் அவரை ஒட்டுதற்கு இவற்றைச் சுழற்றுதலின் வேள்வி ஒர்க்கும் முகத்திற்கு இக்கைகள் ஏற்றவாறு உணர்க' என்று கச்சி ர்ைக்கினியர் விளக்குவார். முருகன் அசுரகுலத்தைக் கட்டறுப்பவன். அசுரர்கள் சுரர்களாகிய தேவர்களின் பகைவர்கள். அந்தணர் செய்யும் வேள்விகளில் அவியுணவு பெற்றுத் தம் கடமைகளே ஆற்று பவர் தேவர். அவர்கள் உணவு பெறுவதற்குரிய வேள்வி யைக் குலேப்பதற்கு அசுரர்கள் முந்துவார்கள். அப்போது வேள்வி காவலனகிய முருகன் வேற்படை ஏக்தி அவர்களே அழிப்பான். தாமத குணத்துக்கும் அஞ்ஞானத்துக்கும் இருப்பிடமாக உள்ளவர்கள் அசுரர்கள், அவர்களே அழிக்க