பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

திருமுருகாற்றுப்படை விளக்கம்


நூல்களில் கடவுள் வணக்கத்தை அமைத்துப் பாடினார்கள். இப்போது சொன்ன வரிசையில் ஒவ்வொரு நூலுக்கும் கடவுள் வாழ்த்து இருக்கிறது. எட்டுக்தொகை நூல்களில் ஒவ்வொரு நூலுக்கும் ஒவ்வொரு கடவுள் வாழ்த்தை அமைத்திருக்கிறார்கள். பத்துப்பாட்டு என்ற தொகுதியில் தனியே கடவுள் வாழ்த்து என்ற ஒன்று இல்லாவிட்டாலும் முதலாவது பாட்டாக இருப்பது திருமுருகாற்றுப்படையே. அந்தக் கொகுதிக்குரிய கடவுள் வாழத்காகவே அது நிற்கிறது. அதனைப் பாடியவர் நக்கீரர் என்பவர். அவர் பெரிய புலவர்.


திருமுருகாற்றுப்படையை முதலில் வைத்துப் பத்துப் பாட்டைத் தொகுத்ததற்குக் காரணம் என்ன என்பதை ஆராயவேண்டும்."நக்கீரர் பெரும் புலவர்: ஆகையால் அவருடைய பாட்டை முதலாக வைத்தார்கள்" என்று ஒரு காரணம் கூறலாம். ஆனால், அந்த நக்கீரர் பாடிய மற்றொரு பாட்டாகிய நெடுநல்வாடை எனற நூல் ஏழாவதாகக் தொகுக்கப்பட்டிருக்கிறது.நக்கீரருக்காக மரியாதை காட்ட வேண்டுமானல், அவர் பாடிய இரண்டு பாடல்களையும் முதலில் வைத்துக் தொகுத்திருக்கலாம்; அப்படிச் செய்யாமையினால் நக்கீரருடைய சிறப்புக் காரணமாகத் திருமுருகாற்றுப்படை முதலில் வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல இயலாது, இனி,நூல் தோற்றிய காலத்தைக் கொண்டு வகுத்தார்கள் என்ற ஒரு காரணம் சொல்லலாம். நக்கீரருக்கு முன்பு இருந்த புலவர்களுடைய பாடல்களும் பத்துப்பாட்டில் திரு முருகாற்றப்படைக்குப் பின்னே வருகின்றன. ஆகையால் கால அடைவை எண்ணி இவற்றை முறைப்படுத்தினர்கள் என்ற சொல்வதும் பொருந்தாது. -