பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 திருமுருகாற்றுப்படை விளக்கம் ஞானவடிவமான வேற்படையே ஏற்றது. ஆதலின் அதனல் கிருதர்களே அழிக்கிருன் முருகன். - இந்த இரண்டு கைகளின் புகழையும் விரித்துக் கூறு கிருர் அருணகிரிநாதர். ' வரைபக நிருதர் முடிபக மகர மகோததி தீயின் வாயின் மறுகவி திர்த்தயில் வென்றி தங்கு துங்க வேலைப் புணைந்தன’’ என்பது வேலெடுத்த புயத்தைச் சொன்னது. கிரவுஞ்சமலே பிளவு படவும், அசுரர்களுடைய தலைகள் பிளக்கவும், மகரமீன் உலவும் பெருங்கடல் வேலிலிருந்து தோன்றிய தீயிள் வாயிலே துன்புறவும் சுழற்றி, கூர்மையும் வெற்றியும் தங்கிய தூய வேலாயுதத்தை அழகாகக் கொண்டவை' என்பது இதன் பொருள். முருகன் இயற்றிய வீர விளையாடல்களே எண்ணி இவ் வாறு விரித்துக் கூறினர். * அடுத்தபடி கேடயத்தைச் சொல்கிரு.ர். " மதியென உதயரவியென வளைபடு தோல்விசால நீல மலிபரிசைப்படை கொண்டு நின்றுழன்று சாதிக்க முந்தின.' 'சந்திரனைப் போலவும் உதய சூரியனைப் போலவும் வளைந்துள்ள தோலும் விரிவும் நீல நிறமும் மிக்க கேடய மாகிய ஆயுதத்தை எந்தி கின்று திரிந்து மேற்கொண்ட காரியத்தை நிறைவேற்ற முந்துகின்றவை' என்பது இதன் பொருள். அந்தப் படை வட்டமானது, கரியது, தோலால் செய்தது என்ற செய்திகளை இதல்ை உணர்கிருேம்.