பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கரங்கள் - - 167 ஞான முத்திரைக் கைகள் முருகன் சிறந்த ஞானசிரியன். குமரகுருபரன். எஞ்சிய பொருளே ஏமுற காடித் திங்கள் போலத் திசைவிளக்கும்' திருமுகத்தை உடையவன். அந்தச் சிறப்புக்கு ஏற்ற கரங் கள் இரண்டு உள்ளன. அவற்றை இனிச் சொல்ல வருகிருர், கக்கீரர். முருகன் ஞானகுருவாக எழுந்தருளியிருக்கும்போது மோன குருவாகவும் இருக்கிருளும். அப்போது அவனுடைய திருக்கரம் ஒன்று சின்முத்திரையைக் காட்டியபடி அவன் திருமார்போடு ஒட்டித் தோன்றுகிறது, இடக்கை மாலையைப் பற்றிக்கொண்டு இலங்குகிறது. ஒருகை மார்பொடு விளங்க, ஒருகை தாரொடு பொலிய. "முனிவர்க்குத் தத்துவங்களேக் கூறி உரையிறந்த பொருளே உணர்த்தும் காலத்து, ஒருகை மார்போடே விளங்கா கிற்க, ஒருகை மார்பின்மாலை தாழ்ந்ததனேடே சேர்ந்து அழகு பெற என்று கச்கினர்க்கினியர் உரை கூறுவர். இதை விளக்கும்போது, என்றது. இறைவன் மோனமுத்திரையத்தனய்த் தானயே இருந்து காட்ட, ஊமைத் தசும்புள் நீர் நிறைந்தாற்போல ஆனந்த மயமான ஒளி மாணுக்கர்க்கு கிறைதலின், அதற்குரிய மோனமுத்திரை கூறிற்று; "தன்னை யுன்னி என்னேயாக்கிய போழ்தே யானவ னுயினேன்' என்பதன்ை உணர்க' என்று எழுதி யுள்ளார். தட்சினமூர்த்தி சின்முத்திரையைத் தரித்து மோன குருவாக எழுந்தருளியிருந்த கோலத்தை இது கினேப்பிக் . கிறது.