பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 திருமுருகாற்றுப்படை விளக்கம் கல்லாவின் புடையமர்ந்து நான்மறையா றங்கமுதற் கற்ற கேள்வி வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கப் பாலாய் எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச் சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைந்துபவத் தொடக்கை வெல்வாம்’ என்பதில், அந்தக் கோலம் சொல்லோவியமாக உள்ளது, அவ்வாறே முருகனும் சின்முத்திரையைத்தரித்த கோலத்தில் குருவாக வீற்றிருக்கிருன் என்பது மேலே சொன்ன விளக்க வுரையால் புலனுகிறது. ஞானபண்டித சாமியாக இருத்த லின் அவன் மோன குருவாக இருப்பதற்கும் உரிமையுடை யவன். - 'அன்ருலின் கீழிருந்து மோன ஞானம் அமைத்தசின்முத் திரைக்கடலே அமரர் ஏறே' என்று தாயுமானவர் போற்றும் கோலம் முருகனுக்கும் ஏற் புடையது போலும். இந்த இரண்டு திருக்கரங்களையும் அருணகிரிநாதர் சிறப்பிக்கும் முறையை இனிப் பார்க்கலாம். இதோ மோன முத்திரை தரித்த செங்கையை வகுக்கிருர். 'மனகுண சலன மலினமில் துரிய அதீத சுகாது பூதி மவுன நிரசுர மந்திரம் பொருந்தி மார்பிற் றிகழ்ந்தன.” "மனமும் குணமும் சலனமும் ஆகிய அழுக்குகள் இல்லாத துரியமும் கடந்த துரியாதீத கிலேயில் பெறும் ஆனந்த அநுபூதியைத் தருவதற்குக் காரணமான மவுன மான அட்சரம் ஏதும் இல்லாத மந்திரமாகியமுத்திரையைப் பொருந்தித் திருமார்பில் திகழ்ந்தவை' என்பது இதன் பொருள். -