பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 - -- திருமுருகாற்றுப்படை விளக்கம் போர் தேவாசுரம் என்று பெயர் பெறும். அதைப் போன் ն) பெரிய போர் வேறு இல்லே. போரில் பெற்ற வெற்றியின் சிறுமை பெருமை, எதிர்த்த பகைவனின் கிலேயைப் பொறுத்தவை. சூரன் மிக்க வலிமையுடையவனதலால் அவைேடு செய்த போரில் கிடைத்த வெற்றி பெரிய வெற்றியாகும். இதை எண்ணியே நக்கீரர், "குர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி' என்று. முருகனைப் பாடினர். . முருகன் இந்த வெற்றியைக் கொண்டாடுகிருன், பேய்கள் போரில் உணவு பெறும் என்பதை முன்னே பார்த்தோம். மற்றக் காலங்களிலெல்லாம் பட்டினியாக இருந்த அலகைகள் எங்கே போர் நடைபெறுகிறதென்று பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கும். போர்க்களத்தை அடைந்த பிறகு அங்கே உள்ள பிணங்களே த் தின்னும், அப்போது கொற்றவைக்குப் பூசைபோட்டுப் பிறகே பேய்கள் உண்ணுவதாகச் சொல்லுவது மரபு. இதைக் களவேள்வி என்பர். எங்கே போர் கடந்தாலும் இறுதியில் களவேள்வி கடைபெறுவதாகச் சொல்வர். பரணி நூல்களிலும் பழங்காலத் தமிழ் நூல்களிலும் அது பற்றிய செய்திகள் வருகின்றன. - முருகன் போர் செய்து வெற்றிகொண்ட போது கணக்கற்ற பேய்கள் விருந்து உண்டன. அதனல் செருக்களத்து அலகை வகுப்பு போர்க் களத்து அலகை வகுப்பு என்று அந்தக் காட்சிகளை வருணிக்கும் பாடல்களே அருணகிரியார் பாடியருளினர். இந்தக் களவேள்வியில், பல நாள் பசித்திருந்தாலும் உண்ணுவதற்கு முன் பேய்கள் தம்முடைய தலைவியாகிய, துர்க்கையை வாழ்த்துகின்றன. *