பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கரங்கள் 17 to "வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ'கிைய முருகனுக்கு இந்தக் களவேள்வியில்ை இரண்டு பங்கு. உவகை உண்டாகிறது. தன்னுடைய தாயைப் போற்றும் விழா அது என்பதலுைம், பல காலம் பசித்திருக்கும் எழைப்பேய்கள் உணவு பெறுகின்றன என்பதலுைம் வந்த உவகை அது. ஆதலின் போரில் வீரம் காட்டி வென்ற முருகன் களவேள்வி நன்கு நடைபெறுவதற்கு வேண்டிய செயல்களைச் செய்கின்ருன், . செறுகர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவுகொள் கெஞ்சமொடு கனம்வேட் டன்றே என்பதனால் அவனுடைய திருமுகங்களில் ஒன்று களவேள்வி நடைபெறும்படி செய்கிறது என்பதை முன்பு பார்த்தோம். அந்தத் திருமுகத்துக்கு ஏற்ற இரண்டு. கைகளின் செயல்களே இப்போது சொல்ல வருகிருர் ாக்கீரர். அவற்றில் ஒரு கையை முருகன் மேலே தூக்கிச் சுழற்றுகின்ருன். அந்தக் கையில் உள்ள வளையும் சுழல் கிறது. அவ்வாறு கையைச் சுழற்றுவது களவேள்வியை நன்கு கடத்த்வதற்கு உத்தரவு கொடுக்கும் அடையாளம். வ்ேலே வாங்குகிறவர்கள் கையை மேலே தூக்கி விரலே அசைத்து, "வேலே நடக்கட்டும்' என்று குறிப்பிப்பது போன்றது இது. முருகன் கையை உயர்த்தும் போது அதில் அணிந்த வளை கீழே கழுவி முழங்கைக்கு முன் வந்து நிற்கின்றது. இந்தக் காட்சியைச் சொல் லுகிருர் நக்கீரர். ஒருகை, கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப, (ஒரு கையானது கீழே கழுவி விழும் வளையோடு' மேலே சுழன்று களவேள்வி செய்க என்று உத்தரவிட தொடி-வளே. கொட்ப-சுழல. களவேள்விக்கு முத்திரை கொடுப்ப என்று உரை எழுதுவார் கச்சினர்க்கினியர்.)