பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 திருமுருகாற்றுப்படை.விளக்கம் இவ்வாறு மேலே உயர்த்திக் களவேள்வி கடக்க எவும் கைக்கு இணையான கை மணியை அடிக்கிறது. முருகன் திருக்கையில் இருக்கும் பொருள்களில் மணியும் ஒன்று. கொற்றவைக்குப் பூசை செய்வதே களவேள்வி. அந்தப் பூசைக்கு மணியடிக்க வேண்டும் அல்லவா? முருகனுடைய மற்ருெரு கை அதைச் செய்கின்ற தாம. ஒருகை பாடுஇன் படுமணி இரட்ட. (மற்ருெரு கை ஓசை இனிதாக உள்ள ஒலிக்கின்ற மணியை மாறி மாறி அடிக்க. பாடு-ஓசை, படுதல் - ஒலித்தல். இரட்டுதல்-மாறி மாறி அடித்தல்.) அந்த மணியின் ஒசை கேட்பதற்கு இனிதாக இருக் கிறது. மேலே உள்ள கையை அசைக்கிருன்; உடனே கீழே உள்ள கையில்ை மணியை அடிக்கிருன்: இப்படி மாறி மாறிச் செய்வதனல் படுமணி இரட்ட' என்ருர். களவேள்வியாகிய கொற்றவையின் பூசையை கடத்துகின்ற தலைமைப் பூசாரியாகவே முருகன் விளங்குகிருன். தன் அன்னேயின் பூசையை அவன் அன்புடன் செய்ய முந்து வது பொருத்தந்தானே? - இங்தக் கைகளின் வருணனையை அருணகிரியாரின் திருவாக்கில் இனிப் பார்க்கலாம். -- போர்க்களத்தில் கிசாசரர்களாகிய அசுரர்கள் மேலும் மேலும் கறுவிக் கொண்டு முந்துகிருர்கள். வெளி முகடளவும் அவர்களுடைய சேனே கள் பரந்து கிற்கின்றன. அவர்கள் இப்போது போரில் தொலைந்து போயினர். இன்னும் யார் இருக்கிருர்கள் என்று தேடிச் சாடினர் வீரர். போர்க்களம் இப்போது பிணம் பரந்த காடாகி விட்டது. பேய்கள் அவர்களின் உடலங்