பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

wi'74 - திருமுருகாற்றுப்படை விளக்கம் களவேள்வி கடப்பதற்காக அங்கே உள்ள பேய்களே அவை நன்கு காணும்படி ஒரு கையை உயர்த்தி ஏவுகிருன் முருகன். அங்கே வராமல் இருக்கும் பூத பிசாசங்களும் களவேள்வியில் உணவு பெறும்படி, அவற்றிற்கு அழைப்பு விடுப்பதுபோலப் பேரொலியுடன் ஒலிக்கும் மணியை அடிக்கிரும்ை. இன்பம் வழங்கும் கைகன் இறைவன் சத்தியோடு ஒன்றி வாழ்வதனால் உலகில் ஆண் பெண்கள் உறவு கொண்டு இல்லறம் நடத்து இருர்கள். நல்ல வண்ணம் யாவரும் வாழப் பெண்ணில் கல்லாளொடும் பெருந்தகை இருந்தது போல, முருகனும் மடவரல் வள்ளியொடு நகையமர்ந்த முகத்தோடு விளங்கு கிருன் என்பதைப் பார்த்தோம். அந்த ஆருவது முகத்துக்கு இணைந்த கைகள் இரண்டையும் இப்போது நக்கீரர் சொல்ல வருகிருர். யாவரும் குடியும் குடித்தனமுமாக வாழவேண்டு மாளுல் பூமி செழிக்க வேண்டும். காடு செழித்தால் ஊர் செழிக்கும். ஊர் செழித்தால் வீடு செழிக்கும் வீடு செழித்தால் இல் வாழ்வு கன்கு நடைபெறும். உடம்பும் உயிரும் ஒன்றி வாழ்வதற்கே மழை இன்றியமையாதது. தன் பிள் ளேக்குத் திருமணம் செய்து வைத்து அவனைத் தனியே வாழும்படி வைக்க வேண்டுமென்று தங்தை விரும்பினால் ஒர் அழகிய வீட்டைக் கட்டிக் கொடுத்து அதில் நன்கு வாழ்வதற்குரிய பண்டங்களை நிரப்பிவைப் .பான், அப்படியே இறைவனும் உயிர்கள் நன்கு வாழ வேண்டுமென்று இந்தப் பிரபஞ்சத்தை உண்டாக்கித் தந்திருக்கின்ருன். இந்த உலகத்தில் யாவரும் இல்லற வாழ்வில் இன்புற்று வாழவேண்டுமென்று மழையைப் பெய்விக்கிருன். -