பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கரங்கள் 175 இறைவன் அருளால் மழை பொழிகிறது. முருக லுடைய திருக்கரங்களில் ஒன்று இதைச் செய்கின்றதாம். ஒருகை, நீல்கிற விசும்பின் மலிதுளி பொழிய. (ஒரு கையானது லேகிறம் பெற்ற வானத்திலிருந்து மிக்க துளிகளாக மழையைப் பொழிய.) மழை பெய்தால் அது இறைவனுடைய கருணையைக் காட்டுவதென்று அன்பர்கள் உவகை கொள்வார்கள். அடுத்த கை தேவலோக மகளிருக்கு மணமாலேயைச் சூட்டுகிறதாம். தேவலோக மகளிர் மங்கல வாழ்வு பெற்ற தற்கு முருகனே காரணம், சூரபன்மல்ை அலேப்புண்டு வாழ்விழந்த தேவர்கள் அவல்ை அழிந்து படாமல் அவர் களைக் காப்பாற்றின்ை முருகன், தேவ மகளிர் தாலிக்கு வேலியாக விளங்குபவன் அவன். " சேல்வாங்கு கண்ணியர் வண்ணப் - பயோதரம் சேரஎண்ணி மால்வாங்கி ஏங்கி மயங்காமல் வெள்ளி மலைஎனவே கால்வாங்கி நிற்கும் களிற்ருன் கிழத்தி கழுத்திற்கட்டும் நூல்வாங்கி டாதன்று வேல்வாங்கி பூங்கழல் நோக்குநெஞ்சே!” என்ற கந்தரலங்காரத்தில், இந்திராணியின் மங்கலத்தைக் காத்தவன் முருகன் என்ற கருத்து வருகிறது. ஆகவே, அமர மகளிர் மஞ்சளும் குங்குமமுமாக, பூவும் மங்கலமுமாக வாழும்படி செய்தவன் முருகன். இந்தக் கருத்தையே வேறு வகையில் சொல்கிருர் இக்ரேர்.