பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 திருமுருகாற்றுப்படை விளக்கம் வயிரமேறிய ஊதுகொம்புகளின் பேரொலி கேட்கிறது. தூய வெண்மை கிறமுள்ள சங்குகள் முழங்குகின்றன. இடி இடித்தாற்போல வலிமையுடன் அதிரும் முரசுகள் ஒலி எழுப்புகின்றன. - . அக்தரப் பல்இயம் கறங்கத் திண்காழ் வயிர் எழுந்து இசைப்ப, வால்வளை ஞரல. உரம்தலைக் கொண்ட உருமிடி முரசமொடு. (வானுலகத்திலுள்ள இசைக் கருவிகள் முழங்க, திண்ணிய வயிரத்தையுடைய கொம்புகள் ஓங்கி ஒலிக்க, வெண்மையான சங்குகள் ஒலியை எழுப்ப, வலிமையை யுடைய இடியைப்போன்ற முரசங்களோடு-மயில் முழங்க என்று சொல்ல வருகிரு.ர். பல் இயம்-பல வாத்தியங்கள். கறங்க-ஒலிக்க. காழ்வயிரம். வயிர்-ஊதுகொம்பு. வால்வளை-வெள்ளிய சங்கு. ஞரல-ஊத. உரம்-வலிமை. உரும் இடி-பெரியஇடி.) முருகனுக்கு மயிலும் ஒரு கொடி. பல பீலிகளையுடைய மயிலே அவன் வெற்றிக்கொடியாக ஏந்தியிருக்கிருன்.. சுற்றிச் சூழப் பல வகை வாத்தியங்கள் ஒலிப்பதைக் கண்டு முருகன் ஆணையினல் அந்த மயிலும் தன் குரலே எழுப்பி ஒலிக்கிறது. பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ. (பல பீலிகளையுடைய மயிலாகிய வெற்றிக்கொடி குரல்காட்ட, பொறி-பீலி. அகவ-குரல் முழக்க மன்னர்கள் வரும்போது அவர்களுடைய வரவை யாவ ரும் அறிந்து கொள்ளும்படி இசைக்கருவிகளை முழக்குவார் கள். அவர்களேக் கண்டு இன்புற்றுத் தம் குறைகளைச் சொல்லிக் கொள்ளவும் வேண்டிய உபகாரங்களைப் பெறவும் மக்கள் அவர்களே அணுகுவார்கள். அப்படி