பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கரங்கள் - 179 அவர்களால் கலம் பெறுவோர்களுக்கு அவர்களின் வரவை அறிவிக்கவே இந்த இசைக்கருவிகளே முழக்குவார்கள். வருவோர்களின் தகுதிக்கு ஏற்றபடி இந்த வாத்தி யங்கள் இருக்கும். இறைவன் திருவீதியில் உலாவரும் போது பல வாத்தியங்களே வாசிப்பதை நாம் பார்க்கிருேம் அல்லவா? - முருகன் எல்லோரிலும் வல்லவன். பெரிய உபகாரி. ஆதலின் தேவர்கள் அவன் வரவை அறிவிக்கும் இசைக் கருவிகளே முழக்குகிருர்கள். இந்தப்பேராரவாரத்தோடு முருகன் வானத்தின் வழியே வருகிருன். உலகிலுள்ள அன்பர்கள் தன்னே வந்து வழி பட்டு உய்தி பெறும்பொருட்டு அவன் சில இடங்களில் திருக் கோயில் கொண்டு காட்சி தருகிருன். திருச்செந்தூரில் தங்கி மக்களுக்குக் கருணை பாவிக்கும்பொருட்டு இப்போது எழுந்தருளி வருகிருன். மக்களுக்கு அவனுடைய திருவருளைப் பெறவேண்டும் என்று உள்ள விருப்பத்தைக் காட்டிலும். அவர்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்று அவன் கொண்டுள்ள விருப்பம் அதிகமானது. குழந்தை உணவு உண்ண வேண்டும் என்று கொள்ளும் விருப்பத்தைவிட அதற்கு ஊட்டவேண்டும் என்ற வேகம் தாயினிடம் மிகுதி யாக இருக்கிறது. அவ்வாறே முருகனுக்கும் கருணே வேகம் இருக்கிறது. மக்கள் இறைவனே வழிபட எண்ணுவிட்டாலும் அவன் அவர்களே ஆட்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றுவதில்லை. பிள்ளை தன் தாயைப் புறக்கணித்து விட் உாலும் தாய் தன் பிள்ளேயை மறப்பதில்லே, பிள்ளைப் பாசம் அவளை விட்டுப் போவதில்லை. அதை எண்ணியே, "பெற்ற மனம் பித்து பிள்ளே மனம் கல்லு" என்ற