பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 திருமுருகாற்றுப்படை விளக்கம்: பழமொழி எழுந்தது. இறைவனைச் சுந்தரமூர்த்தி நாயனுர், "பித்தா” என்று பாடினர். எல்லோரையும் பெற்றவணுகிய அவன், அவர்கள் தன்னே மறந்தாலும் அவர்களே ஆட் கொள்ள வேண்டுமென்று பித்துப் பிடித்திருக்கிருளும். அவனுடைய கருணே அவ்வளவு வேகமானது. நோயாளிகள் வந்து காத்திருப்பார்களே என்று கடமை. யுணர்ச்சியுடைய மருத்துவர் ஒருவர் தம் மருத்துவசாலைக்குக் காரில் விரைவது போல முருகன் திருச்செந்துரை நோக்கி யானையின்மேல் விரைந்து வருகிருன். விசும்பு ஆருக விரைசெலல் முன்னி. (ஆகாயமே வழியாக விரைந்து செல்வதைத் திருவுள் ளத்திற் கொண்டு.) இவ்வாறு சென்று திருச்சீரலேவாயை அடைந்து: அங்கே தங்கியிருக்கிருன். அன்பர்களுக்கு அருள் சுரக்கும் பொருட்டு இவ்வாறு தங்குதல் அவனிடத் தில் நிலைபெற்ற குணம் ஆகும். உலகம் புகழ்கின்ற தலம் திருச்செந்தார். காளுக்கு நாள் அதன் மேன்மையும் சிறப்பும் ஓங்கி வருகின் றன. அந்த அலைவாயில் அவன் எழுந்தருளியிருக்கிருன். உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்ச் சேறலும் கிலைஇய பண்பே. (உலகத்தார் புகழ்ந்த, நாளுக்கு நாள் ஓங்கி வருகின்ற உயர்ந்த மேலான சிறப்பையுடைய அலைவாய்க்குச் சென்று தங்குவதும் அவனுடைய கிலேத்த பண்பாகும். சேறல்-செல்லுதல்; இங்கே சென்று தங்குதல். திருப் பரங்குன்றத்தில் இருப்பதோடு திருச்சீரலைவாயிலும் இருப்பான் என்பதை உம்மை காட்டுகிறது.).