பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கரங்கள் 181 மனிதன் ஒரு காலத்தில் ஓரிடத்தில்தான் இருப்பான். முருகன் எங்கும் எப்பொழுதும் இருப்பான். ஒரே காலத்தில் பல இடங்களில் பலருக்குக் காட்சி தக்தருளு வான். திருப்பரங்குன்றத்தில் சில காலம், அகில வாயில் சில காலம் இருப்பான் என்று கொள்ளக்கூடாது. திருப்பரங் குன்றத்தில் உரிமையோடு தங்கி யிருப்பதைப் போலவே திருச்செந்தூரிலும் தங்கி யிருப்பான். இப்படி ஒரே சமயத் தில் பல இடங்களில் இருத்தல் அவனுடைய கிலேயான பண்பு சர்வ வியாபி யாதலால் இப்படி இருப்பது அவனுக் குச் சாத்தியமாகிறது. பூமிக்கு அடியில் எங்கும் தண்ணீர் இருக்கிறது. . அதனுல் எங்கே வெட்டினலும் தண்ணிர் கிடைக்கிறது. ஒரே சமயத்தில் பல இடங்களில் பல கிணறுகள் வெட்டினலும் தண்ணிர் கிடைக்கிறது. அவ்வாறே எங்கும் கிறைந்திருக்கும் முருகன் பல இடங்களிலும் ஒரே சமயக் தில் வெளிப்படுகிருன். திருச்செந்தூருக்கு அலைவாய் என்பது ஒரு பெயர். அதையே சீரலைவாய் என்றும், திருச்சீரலைவா யென்றும் அடைகளோடு சேர்த்து வழங்குவார்கள். அலேமோதும் கடற்கரையில் அலேயின் வாயிலே திருக்கோயில் அமைக் திருப்பதால் இந்தப் பெயர் உண்டாயிற்று. 'அலவாயில் முருகன் எழுந்தருளியிருக்கிருன். அது மட்டுமா? இன்னும் கேள்' என்கிருர் நக்கீரர். அலைவாய்ச் சேறலும் கிலைஇய பண்பே; அதாஅன்று. மேலே மூன்ருவது படைவீடாகிய திருவாவினன் குடியைச் சொல்ல வருகிருர்.