பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஆவினன்குடி இதோ நக்கீரர் கம்மைத் திருவாவினன்குடிச்கு அழைத்துச் செல்கிருர், அவரோடு போனல் நாம் ஆகாயத்தில் பறக்கலாம்; பூமியிலே ஒடலாம்; மனிதர் களுடைய இயல்புகளே ஞான திருஷ்டியால் கண்டு. கொள்ளலாம்; தெய்வங்களேக் கண்டு அடையாளம் தெரிந்து கொள்ளலாம், இதென்ன இவ்வளவு பெரிய கூட்டம்? ஆவினன் குடிக்கு காம் வந்துவிட்டோம். இங்குள்ள முருகனத் தரிசிப்பதற்காகத்தான் இல் வளவு பெரிய கூட்டம் வந்திருக்கிறது. நக்கீரர் நமக்கு அவர்களேக் காட்டுகிரு.ர். முன் புகும் முனிவர் இதோ இவர்களைப் பாருங்கள். பார்த்தாலே கையைக் குவித்துக் கும்பிட வேண்டுமென்று தோன்று: கிறதல்லவா? தவமே உருவாகிய முனியுங்கவர்கள். இந்தப் பெருங் கூட்டத்துக்கு இவர்களே தலைவர்களாகத். தோன்றுகிருர்கள். இவர்களின் இடையிலே தவக்கோலத்துக்கு, அடையாளமாகிய மரவுரி இருக்கிறது. சற்றே இவர்கள் திருமுடியைப் பார்க்கலாம். ஆ இவர்களுக்கு எவ்வளவு வயசாயிற்ருே தெரியவில்லையே! முடி முழுவதும் தும்பைப் பூவாக வெளுத்திருக்கிறது. அதை கன்ருக உச்சியில் முடித் திருக்கிருர்கள், வலம்புரிச் சங்கைப் போல அந்த முடிஉருவத்தாலும் நிறத்தாலும் தோன்றுகிறது.