பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஆவினன்குடி - 183 சீரை தைஇய உடுக்கையர், சீரொடு வலம்புரி புரையும் வால்கரை முடியினர். (மரவுரியை உடையாக அணிந்தவர்; அழகோடு வலம்புரிச்சங்கை ஒத்த வெண்மையான கரை முடியை உடையோர். சிரை-மரவுரி. தைஇய அணிந்த, உடுக்கை உடை. வால் கரை-வெண்மையான கரை.) இவர்களுடைய திருமேனியில் புஷ்டி இல்லை. ஆனல் ஒரு தேசு இருக்கிறது. மாசு என்பது சிறிதும் இல்லாத தாய திருமேனி. பளபளப்புக்குக் காரணம் தசைப் பிடிப்பா? இல்லை, இல்லை. இவர்கள் தம் மேலே மான் தோலைப் போட்டுக் கொண்டிருக்கிருர்கள். மார்பைப் பாருங்கள், கொஞ்சமாவது தசை தெரிகிறதா? எலும்பு களே மேலே தோன்றுகின்றன. அவற்றை எண்ணிக் கொள்ளலாம் போல இருக்கின்றன. உடம்பு இளேத்தும் ஒளி இளேக்காமல் பெருகியிருக்கிறது. மரசு அற இமைக்கும் உருவினர், மானின் உரிவை தைஇய ஊன்கெடு மார்பின் என்புஎழுந்து இயங்கும் யாக்கையர். (மாசு இல்லாமல் விளங்கும் திருமேனியை உடை யோர், மான்தோலேப் போர்த்த, தசைகெட்ட மார்பில் எலும்புகள் மேலே தோன்றி அசையும் உடம்பை யுடை யோர். இமைக்கும்-விளங்கும். உரிவை-தோல்.) - இவர்கள் ஏன் இப்படி இளேத்திருக்கிருர்கள்? இந்த உடம்பு சோற்ருல் எடுத்த சுவர். சோறு குறைந்தால் இது மெலியும். இவர்களும் உணவு இல்லாமல் இளேத்துப் போயிருக்கிருர்கள்; ஆம்; உணவு இல்லாமல் தான் இப்படி ஆகியிருக்கிருர்கள். ஆனல் ஏழைகள் அல்ல; தாமே வலிந்து உணவை உண்ணுமல் விரதம் இருப்