பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 திருமுருகாற்றுப்படை விளக்கம் பவர்கள்; அடிக்கடி சேர்ந்தாற்போல் பட்டினி கிடந்து தவம் புரிபவர்கள். 'உண்ணுது நோற்பார் பெரியர்' என்று திருவள்ளுவர் சொல்லவில்லையா? நமக்குத்தான் ஒரு வேளை காபி இல்லாவிட்டாலும் ஒன்றும் ஒடுவதில்லை. இவர்கள் உணவு கிடைக்காமல் இப்படி இல்லை. உண்ண வேண்டுமானல் ஆயிரம் பேர் சுவையுள்ள உணவைத் தரச் சித்தமாக இருக்கிருர்கள். ஆலுைம் இவர்கள் தாமாகவே உணவை உண்ணுவதில்லை. தாம் செய்யும் தவத்துக்கு அது இடையூருக இருக்கிற தென்று விரதம் இருக்கிருர்கள். காமமும் தாமதகுணமும் உணவினல் மிகுதலின் இந்த விரதத்தை மேற்கொள்ளு கிருர்கள். நம்முடைய வாழ்க்கையில் நாம் பல பல காரியங்களைச் செய்கிருேம். ஒவ்வொருவரும் தமக்கு அமைந்த வாழ்க்கை வகைக்கு ஏற்பக் கால முதல் இரவு வரையில் பல பல செயல்களில் ஈடுபட்டிருக்கிரு.ர். யாவரும் எது செய்தாலும் செய்யாவிட்டாலும் தவிராமல் செய்கின்றவை இரண்டு. ஒன்று ஊண், மற்ருென்று உறக்கம். யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்குவது மாகமுடியும்' என்பர் தாயுமானவர். இந்த வாழ்க்கை என்னும் தேருக்குப் பல அங்கங்கள் இருந்தாலும், இதன் முன் சக்கரங்கள் இந்த இரண்டும். இது எங்கெங்கோ செல்கிறது; சாமாறே விரைகிறது. இதனே மாற்றி ஆமாறு செல்லத் தாண்ட வேண்டும். தேரின் போக்கை மாற்ற வேண்டுமானல் தேர் முழுவதையும் திருப்ப