பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 திருமுருகாற்றுப்படை விளக்கம் இதுவரையில் இவர்களுடைய புறத்தோற்றத்தைப் பார்த்தோம். இனி இவர்களுடைய அகத்தையும் பார்க்க նմf Lք ս பட்டினி கிடப்பவர்களுக்குச் சள்ளுச் சள்ளென்று. கோபம் வரும். இவர்களுடைய மனம் எப்படி இருக்கிறது? யாரிடத்திலும் பகை என்பது எள்ளளவும் இல்லை. பிறரிடம் வெறுப்பு வருமா? அதுவும் இல்லை. எந்தப் பிராணிக்கும் இன்னல் இயற்றத் தெரியாதவர்கள்; சகலஜீவ தயாபரர்கள். பகை இன்மையால் மனிதர்கள் யாவரும் இவர்களே அணுகிப் பணிகிருர்கள். செற்றமாகிய ஹிம்சை இல்லாமையால் எல்லாப் பிராணிகளும் இவர்களோடு உறவாடுகின்றன. மார்பிலே ஊனே இல்லை என்று உடம்பில் இல்லாததைச் சொன்னதுபோவ, மனத்திலே பகையும் இல்லை, ஹிம்சை யுணர்வும் இல்லை என்று உள்ளத்தில் இல்லாதவற்றையும் சொல்லுகிருர் நக்கீரர். பொல்லாத குணங்கள் இல்லாமையே. பெருமை அல்லவா? இவர்கள் உள்ளே உள்ள செல்வத்தைச் சொல்ல வேண்டாமா? மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ப வற்றில் புத்தி சக்தி மிக்கவன் அறிவாளி; இவர்களுக்கு அந்த அறிவு நிரம்ப இருக்கிறது என்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அறிவு இரண்டு வகை: நூலறிவு வாலறிவு என்பவை; அவற்றை அபரஞானம், பரஞானம் என்று சொல்வார்கள். தக்க ஆசிரியர்களேத் தேடிச்சென்று கற்கும் இயற்கையறிவுள்ள மாணவனுக்கு நூலறிவு கிடைக்கிறது. அது முயற்சியால் வருவது. வாலறிவு என்பது அநுபவத்தால் அறிவது. எத்தனே நூல்களைக் கற்றும் அந்த வாலறிவு இல்லையெனில் கற்றன. அனைத்தும் விணுகிவிடும்- . . .