பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஆவினன்குடி 187° "நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக' என்று காரைக் காலம்மையார் பாடுகிருர், அந்த அறிவுக்கு எல்லேயுண்டு. எல்லேயிறந்த இறையருளறுபவத்தை அந்த அறிவால் அறிய இயலாது. வாலறிவு ஒன்றுதான் அருளறுபவ நுகர்ச்சிக் குரியது, "அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே” என்பதில் அருணகிரியார் சொல்வது வாலறிவை. இந்த முனிவர்கள் வாலறிவிற் சிறந்தவர்கள். பல நூல் களைக் கற்றவர்களுக்கும் இந்த வாலறிவில் எள்ளளவும் தட்டுப்படுவதில்லை. இவர்களோ அந்த அறிவின் தலை நிலத்தில் இருக்கிருர்கள். "அப்படியானல் இவர்களுக்கு நூலறிவு குறைவு தானே?’ என்று கேட்காதீர்கள். அதிலும் இவர்கள் குறைந்தவர்கள் அல்லர். கற்றறிந்த பேரறிவினர்களின் கூட்டத்தில் இவர்கள் தலைமை தாங்குபவர்கள்; கல்வியறி வுக்கு வரம்பாக விளங்குகிறவர்கள்; வாலறிவும் நூலறிவும் ஒருங்கே பொருந்திய மாபெருங் தலைவர்கள் இவர்கள். இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர், யாவதும் கற்ருேர் அறியா அறிவினர். கற்ருேர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர். (பகையையும் பிறரைச் செறுவதையும் நீக்கிய மன. முடையவர்; கற்றவர் சிறிதும் அறியாத வாலறிவினர்: கற்றவர்களுக்கு வரம்பாக விற்கும் தலைமையை உடையவர்.)" இவர்கள் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்றும் இல்லாத தூயவர்கள். மனிதனுக்குக் காமமும் வெகுளியும் தோன்றுவது இயல்பு. ஆனல் அவற்றை அடக்கி வெல்ல வேண்டும். 'ஓங்குசினம் காத்துக் கொள்ளும் குணம்'