பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1188 - திருமுருகாற்றுப்படை விளக்கம் என்பது ஆன்ருேர் வாக்கு, இவர்கள் தம்முடைய மனத்திண் மையில்ை காமத்தையும் வெகுளியையும் வென்றவர்கள். ஞானம் கிரம்பியவர்கள்; அதனல் மயக்கமும் இல்லாத வர்கள். காமமொடு கடுஞ்சினம் கடந்த காட்சியர். (காமத்தோடு கடுமையான சினத்தையும் வென்ற ஞானத்தை உடையோர். கடந்த-வென்ற காட்சிஞானம்.) காமத்தையும் சினத்தையும் வென்றவர் என்று சொன்னர். காட்சியர் என்ருதல்ை ஞானத்துக்கு மறுதலை .யாகிய மயக்கத்தையும் வென்றவர் என்பது தெளிவாகும். 'காமம் வெகுளி மயக்கம் எனும்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்' என்பது திருக்குறள். பிறவி ாேய்க்குக் காரணமான இந்த மூன்றையும் கடந்த முனியுங்கவர்களாகிய இவர்கள், இனிப் பிறவி பெருமல் முத்தி பெறுவதற்குரியவர்கள் இப்போதே அந்த இன்பத்தை நுகர்பவர்கள். அந்த கிலேயைச் சிவன் முக்தி என்பார்கள். அதை அடுத்தபடி சொல்ல வருகிருர் நக்கீரர். இடும்பை யாவதும்.அறியா இயல்பினர். (சிறிதளவும் துன்பத்தை அறியாத இயல்புடைய -வர்கள்.) இன்ப துன்பங்களுக்கு அப்பாலே மலேபோல விற்கும் இயல்புடையவர்கள் சிவன் முக்கர்கள்.