பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 திருமுருகாற் றுப்படை விளக்கம் ஆகவே இன்பமும் துன்பமும் மனத்தைச் சார்க் தவை. இந்த இரண்டும் கடந்த அநுபவம் ஒன்று உண்டு. அங்கே மனத்துக்கு வேலை இல்லை. அப்போது இன்பத்தை உயிர் தனி கின்று அநுபவிக்கிறது. அதுதான் ஆனந்தம்: அதுதான் சுக துக்கம் அற்ற இன்பம், அதையே சிவானந்த மென்றும், பிரம்மானந்த மென்றும், ஆத்மானங்த மென்றும் பலபடியாகக் கூறுவர். அத்தகைய ஆனந்தத்திலே லயித்த இந்த முனிவர் களுக்குச் சிறிதும் துன்பம் என்பதே இல்லை. இடும்பை யாவதும் அறியா இயல்பினர். * (சிறிதேனும் துன்பம் என்பதை அறியாத இயல்ை உடையவர்கள்.) . - இவர்கள் மனம் கண்ணுடிபோல் இருக்கிறது. விருப்பு வெறுப்பு இல்லாமல் இருக்கிறது. அந்த கிலே என்றும் பொருந்தி இருக்கிறது. இவர்களுடைய முதிர்க்க ஞானமே இவர்களுக்கு இந்த நிலையை உண்டாக் கியது. - இத்தகைய முனிவர்கள் முன்னலே புகுகிருர்கள். மேவரத் துணியில் காட்சி முனிவர் முற்புக. (மனம் பொருந்த வெறுப்பில்லாத ஞானத்தையுடைய முனிவர்கள் முன்னலே செல்ல.) முருகனேக் காணும் பொருட்டுக் கைலாயத்திலிருந்தும் வைகுண்டத்திலிருந்தும் அமராவதியிலிருந்தும் பெரிய தேவர்கள் வந்து கொண்டிருக்கிருர்கள். அவர்களுக்கு எதோ குறை இருக்கிறது. அதை நீக்கிக்கொள்ள