பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 திருமுருகாற்றுப்படை விளக்கம் செற்றம் நீக்கிய மனத்தினர், யாவதும் கற்ருேர் அறியா அறிவினர், கற்ருேர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர், காமமொடு கடுஞ்சினம் கடந்த காட்சியர், இடும்பை யாவதும் அறியா இயல்பினர், மேவரத் துணியில் காட்சி முனிவர் முற்புக. முனிவர் பெருங்கூட்டம் முன்னே செல்கிறது. அவர் களைக் கையெடுத்துக் கும்பிட்டு விட்டு. பின்னே வருகின்ற. வர்கள் யார் என்று பார்ப்போம். இசைவாணர் வருகை முனிவர்கள் முதலில் போக, அவர்களே அடுத்துக்: கந்தருவர்களும் அவர்களுடைய மகளிரும் வருகிருர்கள். அவர்கள் இனிய இசையை எழுப்புகிறவர்கள்.முருகன் இசை யில் ஈடுபடுகிறவன். ஆகவே, முருகனுக்கு உகந்த முனிவர்கள் முன்னே செல்ல, அவர்களே அடுத்து அவன் விரும்பும் இசையைப் பாடுபவர்கள் புகுகிருர்கள். சினம் உடையவர்களுடைய சினத்தை ஆற்றுவது இசை, ஒருகால் முருகன் நான்முகனிடம் கொண்ட கோபம் ஆருமல், இருந்தாலும் அதனே ஆற்றுவதற்கு அவர்களுடைய யாழிசை உதவும். - - கந்தருவர்கள் எப்படி இருக்கிருர்கள்? இசைவாணர் கள் எப்போதுமே தம்மை அணி செய்து கொள்ளும் இயல்புடையவர்கள். கர்தருவர்கள் இடையில் அணிக் துள்ள உடை மிக்க மெல்லியதாகவும் வெள்ளே, வெளேரென்றும் இருக்கிறது. பாலேக் காய் ச்சும்போது மேலே ஆவி வருகிறதே. அதை அப்படியே முகந்து ஆடையாக உடுத்துக் கொண்டால் எப்படி இருக்கும்: அப்படி இருக்கிறது அவர்களுடைய :5iTԱս 60 سهLبه س 'பாலாவி யன்ன பைந்துகில்' என்று வேறு நூல்