பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஆவினன்குடி 195 மென்மையாக இருக்கும். அவர்களுடைய மொழி மென் மொழி. கந்தருவர்களின் மூன்று கரணங்களும் இசையோடு இசைந்து இன்புறுத்துகின்றன, அவருடைய உள்ளம். மனேதர்மமாகிய கயனுடை கெஞ்சு. அவர்கள் மொழி மென்மொழி. அவர்கள் கரத்தினுல் நல்ல திவவையுடைய யாழை மீட்டுகிருர்கள். இப்படி மனமொழி மெய்களின் இணைப்புச் செயலால் அவர்களிடம் யாழிசை உண்டா கிறது. செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் கல்லியாழ் கவின்ற கயனுடை நெஞ்சின் மென்மொழி மேவலர் இன்கரம்பு உளர. (காதிலே வைத்துப் பார்த்துச் சுருதிகூட்டிய நரம்புக் கட்டையுடைய நல்ல யாழிலே பயிற்சியுடையவர்சளும், மனேதர்மமுள்ள நெஞ்சையும், மென்மையான மொழிகளே யும் உடையவர்களுமாகிய கந்தருவர் இனிய யாழ் நரம்பை .மீட்டிப் பாட கேர்பு-சேர்த்து. செய்வு-சுருதிகூட்டும் செய்கை. திவவு-நரம்புக் கட்டு. கயன்- இனிமை, அன்பு: இங்கே மனேதர்மம். மேவலர்-மேவுதலே உடையவர். உளரமீட்ட) - முனிவரை அடுத்து யாழை வாசித்து இனிய பாட்டைப் பாடிக்கொண்டு வருகிருர்கள், கந்தருவர்கள். அவர் களுடைய மனைவிமார்கள் உடனிருந்து பாடிக்கொண்டு வரு கிருர்கள். அவர்களுடைய அழகு சொல்லத் தரம் அன்று. அவர்களுடைய உடம்பின் அமைப்பைப் பார்த்தால் நோய் என்பதன் வாசனையே தெரியாதது என்று தோன்று கிறது. :அவர்கள் சினேக்கிறபடியெல்லாம் அந்த உடம்பு