பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பாட்டு 7 பாலைவனமும், சகாராப் பாலைவனமும் நினைவுக்கு வரும். அவை பல காலமாகப் பாலைவனமாகவே இருப்பவை: வெறும் மணல் பிரதேசமாகக் கிடக்கின்றவை. தமிழ் ாாட்டில் இயற்கையாகப் பாலே சிலம் இல்லை. எப்போ காவது மழையற்று, நீர் இல்லாமல் வறண்டு போளுல் அப்போது அர்தப் பிரதேசம் மட்டும் புல் பூண்டு எதுவும் இல்லாமல் இய்ந்து கிடக்கும். அதையே பாலே என்ருர்கள். ஆகையால் குறிப்பிட்ட ஒரு காலத்தில் செயற்கையாகப் பாலே தோன்றுமே யொழிய, எப்போதுமே வறண்டு கிடக்கும் நிலமாகிய பாலே இந்த காட்டில் இருந்தது இல்லே ஆகையால்தான் கிலத்தை ஐந்து திணை என்று வகுத்திருக் தாலும் "கானிலம்' என்றே சொல்வது வழக்கம், கானிலம் என்பது பொதுவாகப் பூமிக்குப் பெயர். ஐக்கிலம் என்று சொல்லாமல் தானிலம் என்று சொல்வதற்குக் காரணம், இயல்பாக நான்கு விலங்களே இருப்பதுதான். மழை பெய் யாமல் போளுல் சில இடங்களில் பாலகிலம் தோன்றும். சில காலம் பாலையாக இருக்கும். அப்படியிருக்கிற சிலம் எவ்வாறு தோற்றம் அளிக்கும் என்பதைப் புலவர்கள் கண்டு அதனை வருணித்திருக்கிருர்கள். ஆறு மலையில் தோன்றி, மலையை அடுத்திருக்கிற வறண்ட பாலே கிலத்தில் வந்து. பின்பு காடுகளுக்கிடையே புகுகிறது. காடும் காட்டைச் சார்ந்த இடமும் முல்லே என்று பெயர் பெறும், அதற்குப் பிறகு, மக்கள் நெருங்கி வாழ்ந்து வேளாண்மை செய்கிற வயல்களில் பாய்ந்து வளம் பெருக்கும் இடம் மருத கிலம் என்று பெயர் பெறும், கடைசியில் கடலும் கடலேச் சார்ந்த இடமுமாக இருக்கிற பகுதிக்கு நெய்தல் திணை என்று பெயர். இவ்வாறு குறிஞ்சி, பாலே, முல்லை. மருதம், நெய்தல் என்று ஐந்து தினேகள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு திணையிலும் அந்த அந்த