பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 திருமுருகாற்றுப்படை விளக்கம் வளைந்து கொடுக்கிறது. அவர்களின் திருமேனி மாந்தளிரின் கிறம் பெற்றுப் பளபளக்கிறது. மாகிறம் என்று பொதுவா கச் சொல்வதுண்டு. உண்மையில் மாகிறம் உடையவர்கள் இந்தக்கந்தருவ மங்கையர். அந்த மேனி பளபளக்கும் பொழு. தெல்லாம் அதில் ஒரு மெருகு தோன்றுகிறது. அழகுத் தேமல் படர்ந்திருக்கிறது. பொன்னே உரைத்த பொடியை உடம்பெல்லாம் பூசினல் எப்படி இருக்கும், அப்படி மின்னு: கிறது அந்த அழகுத் தேமல். அதைத் திதலை என்று. சொல்வார்கள். கோய்இன்று இயன்ற பாக்கையர்: மாவின் அவிர்தளிர் புரையும் மேனியர்; அவிர்தொறும் பொன்உரை கடுக்கும் திதலையர். { (கோயே இல்லாமல் அமைந்த உடம்பை உடையவர்: மாமரத்தின் பளபளக்கும் தளிரை ஒத்த வண்ணத்தை உடையவர்; அப்படிப் பளபளக்குக்தோறும் பொன்னே உரைத்தாற்போலத் தோன்றும் அழகுத் தேமலே உடை யோர்.) - அவர்கள் அணிந்த மெல்லிய ஆடை அவர்கள் மேனி யழகைப் புலளுக்குகிறது. அவர்கள் தம் இடையில் பதி னெட்டு வடங்களே யுடைய மேகலையாகிய பருமம் என்னும் அணியை உள்ளே அணிந்திருக்கிருர்கள். உடை கழுவின. லும் இரகசியத்தை அந்த வடங்கள் மறைத்து விளங்கும். அந்தப் பகுதி மேடாகவும் பள்ளமாகவும் இலக்கணப்படி அமைந்திருத்கிறது. அவர்கள் சிறிதும் மாசுமறுவற்றவர்கள். அவர்களும் கந்தருவர்களோடு சேர்ந்து பாடுகிருர்கள். அந்தப் பாட்டில் சிறிதளவு கூட அபசுவரம் இல்லை; குற்றம் ஏதும் இல்லாதபடி கந்தருவர்களும் அவர் மகளிரும் இணைந்து பாடும் பாட்டுக் கேட்கிறது.