பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஆவினன்குடி 197 இன்னகைப் பருமம் தாங்கிய பணிந்துஏந்து அல்குல் மாசில் மகளிரொடு மறுஇன்றி விளங்க. (கண்ணுக்கு இனிய ஒளியை உடைய பருமம் என்னும் மேகலேயைத் தாங்கியதும், தாழ்ந்தும் உயர்ந்தும் இலக்கணப்படி அமைந்ததுமாகிய இரகசிய உறுப்பை யுடையவராகிய குற்றமற்ற மகளிரோடு அந்தப் பாடல் சிறிதும் குறைபாடு இல்லாமல் எடுத்துக்காட்ட. நகை-ஒளி. பருமம்-பதினெட்டு வடங்களேக் கொண்ட மேகலை. பணிந்து-தாழ்ந்து. ஏந்து-உயர்ந்து கிற்கும். மறு-குற்றம்.1 t கந்தருவர் யாழை மீட்டிப் பாட அவர்களுடன் கந்தருவ மகளிர் பாடுகிருர்கள். அழகு, தூய்மை, சிறந்த முறையால் அமைந்த கருவியாகிய யாழ் ஆகியவற்றை யுடைய அவர்கள் பாடும். பாட்டு மிக மிக இனிமையாக இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா? உடம்பில் வளப்பம் இல்லாத முனிவர்களைச் சொல்லிப் பிறகு மேனி வளம் பெற்ற கந்தருவர்களேச் சொன்னர். இப்படி முரண்பட்ட தோற்றங்களைக் காட்டுவது க்கீரர் இயல்பு என்பதைத் தொடர்ந்து பார்த்து வருகிருேம் அல்லவா? - அவர்கள் குறை முதலில் தவம் செல்ல, அதனை அடுத்து இசை செல்லுகிறது. இந்த இரண்டையும் முன்னிட்டுக் கொண்டு தேவர்கள் வருகிருர்கள். அவர்களுக்கு முருகல்ை ஒரு காரியம் ஆகவேண்டியிருக்கிறது. அதற் காகவே கூட்டமாக வருகிருர்கள் தேவர்கள். திருமால் வருகிருர், சிவபெருமான் வருகிருர்; இந்திரன் வருகிருன்: