பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.திருஆவினன்குடி 201 'வேதம் ஓதி வெண்ணுரல் பூண்டு வெள்ளை எருதேறி' என்பது தேவாரம். இடபக் கொடியைச் சிவபிரான் தம் வலப்பக்கத்திலே உயரப் பிடித்து வருகிருர். அப்பெரு மானுடைய வீரம் சொல்லத் தரம் அன்று. அட்ட வீரட்டானம் என்று அவருடைய வீரத்தைப் புலப்படுத்தும் கலங்கள் இக்காட்டில் இருக்கின்றன. ஆண்மை விளங்கும் திண்மையான தோளேயுடையவர். அந்த விரமூர்த்தியின் ஒருபாகத்தில் உமாதேவியார் அமர்ந்திருக்கிரு.ர். அதுவும் ஓர் அடையாளம். இன்னும் ஒரு சிறந்த அடையாளம் அவருக்கு உண்டு. அது அவருக்கு அமைந்த கண்கள். பொதுவாகத் தேவர்கள் யாவரும் இமையாத கண்ணே யுடையவர். மகாதேவராகிய அப்பெருமான் கண்களும் இமையாதவை என்று சொல்வது பெரிய சிறப்பு அன்று. யாருக்கும் இல்லாத படி அவர் மூன்று கண்களேப் பெற்றவர்; இடமும் வலமும் உள்ள இரண்டு கண்களோடு ஞான கேத்திரமாகிய கெற்றிக்கண்ணே உடையவர். இமையாத முக்கண், மூவரிற் பெற்றவர்" என்று இந்தச் சிறப்பைத் திருக்கோவையாரில் மாணிக்க வாசகர் எடுத்துச் சொல்கிரு.ர். அவருடைய வலிமைக்கு ஏதாவது ஒர் எடுத்துக் காட்டாவது சொல்ல வேண்டாமா? அவர் திரிபுரத்தை எரித்தவர். வெள்ளி, பொன், இரும்பு ஆகியவற்ருல் அமைந்த மதில்களையுடைய திரிபுரங்களைக் கொண்ட மூன்று அசுரர்கள், பறக்கும். அப்புரங்களால் மக்களுக்குத் தீங்கு விளைவித்தனர். சிவபிரான் தம்முடைய புன்னகை யால் அவற்றை அழித்தனர். அவ்வளவு பெருவலிமை யுடைய செல்வர் அவர். அவரும் முருகனைக் காண வருகிருர். - " - -