பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 திருமுருகாற்றுப்படை விளக்கம் வெள்ளேறு. வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள் உமைஅமர்ந்து விளங்கும் இமையா முக்கண் மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும், (வெள்ளேயான இடபக் கொடியைத் தம் வலப் பக்கததே உயர்த்தியவரும், பலரும் புகழும் திண்மையான தோளே உடையவரும். உமாதேவியார் விரும்பித் தங்கும் திருமேனியை உடையவரும், இமையாத மூன்று கண்களே உடையவரும், மூன்று மதில் களை அழித்த வலிமையிலே மிக்க செல்வரும் ஆகிய சிவபெருமானும். வலவயின்-வலப்பக்கத்தில், உயரிய-எடுத்த. எயில் - மதில். முருக்கிய-அழித்த. முரண்-வலிமை.) அடுத்தபடி தேவருக்கு அரசனகிய இந்திரன் வரு, கிருன். இமையா முக்கண் என்று சிவபெருமானேக் கண்ணுல் அடையாளம் கண்டு கொள்வது போல அவனேயும் கண்ணுல் இனம் கண்டு கொள்ளலாம். அவனுக்கு உடெம்பெல்லாம் கண். ஆயிரம் கண்களே உடையவன் இக் கிரன். நூறு யாகங்களேத் தடையின்றி முடித்தால் இந்திரபதவியைப் பெறலாம். அதனல் அவனுக்குச் சதமகன் என்ற பெயர் வழங்கும். அவனும் பெரிய வீரன்தான்; போரில் வெளிப்படையாகப் பொருது பகைவர்களே அழிக்கும் வெற்றி மிடுக் குடையவன். அவனுடைய வளமும் செல்வமும் பெரும்புகழ். பெற்றவை. போக போக்கியங்களுக்கு எடுத்துக் காட்டாக விளங்குவது இந்திரனது வாழ்வு. அதனல்தான்,