பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஆவினன்குடி 203's 'இந்திர லோகம் ஆளும் அச்சுவை' என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் அதனைச் சொன்னர். அவனுடைய பதவிக்கு ஏற்ற வாகனம் அவனுக்கு இருக்கி றது, அது வெள்ளேயானேயாகிய ஐராவதம், மற்ற யானே களுக்கு இரண்டு கொம்புகளே உண்டு. ஐராவதத் துக்கோ கான்கு கொம்புகள். அது கடந்து வந்தால் பார்க்க அழகாக இருக்கும்.வெள்ளிமலை கால் பெற்று கடந்து வருவது போல் இருக்கும். ' வெள்ளி மலைஎனவே கால்வாங்கி நிற்கும் களிற்ருன்' என்று கந்தர் அலங்காரத்தில் அருணகிரியார் சிறப்பிப்பார். ஐராவதம் தன்னுடைய துதிக்கையை நிலத்திலே புரள விடுகிறது. அதன் பிடரியில் வீற்றிருந்து தன் வளம் தோன்ற வருகிருன், இந்திரளுகிய செல்வன். நூற்றப்பத் தடுக்கிய காட்டத்து நூறுபல் வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில்கடைத் தாழ்பெருக் தடக்கை உயர்த்த யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும். (நூற்றைப் பத்துமுறை அடுக்கியதால் வரும் ஆயிரம் கண்களையுடையவனும், நூருகிய பலவகை வேள்விகளே முற்றச் செய்தவனும், எதிர்கின்று பகைவர்களே அழிக்கின்ற வெற்றிச் சிறப்பை உடையவனும், நான்கு உயர்ந்த கொம்பு களையும் அழகு வாய்ந்த கடையையும் பூமியில் தாழ்ந்த பெரிய வளைந்த துதிக்கையையும் உடைய, எல்லோரும் உயர் வாகச் சொல்லும் யானையாகிய ஐராவதத்தின் கழுத்தின் மேல் ஏறியவனும் ஆகிய வளம் மலிந்த செல்வத்தையுடைய இந்திரனும்.