பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஆவினன்குடி 207 பிடியையுடையவர்களாகிய, பலரும் புகழும் மும்மூர்த்தி களும் பழையபடியே தம்தம் தொழில்களே இயற்றித் தலைவர்கள் ஆகும்படியாக, இன்ப முறுகின்ற பூவுலகில் வந்து தோன்றி, தாமரையினல் தோற்றுவிக்கப்பட்டவனும் கேடில்லாத நீண்ட ஆயுளே உடைவனுமாகிய கான் முகனகிய ஒருவனே எண்ணி, அழகு தோற்றும்படிவருகிருர்கள். கிலேஇய-நிலைபெற்ற, ஒன்றுபுரி-ஒன்றையே செய் யும். கொள்கை. கடைப்பிடி, கடமை. மூவரும் மூவேறு தொழில்களைச் செய்தாலும் எல்லாம் உலகத்தைக் காக்கும் ஒன்றையே அடிப்படையாகக் கொண்டவை; ஆதலின் மூன்றும் தொடர்புடையவை. ஒன்று இல்லாவிட்டால் மற்றவை நிகழ்வதில்லை. ஏமுறு-இன்பம் அடைகின்ற. பயந்த-பெற்ற. தா-கேடு, ஊழி - வாழ்நாள். காண்வரதோற்றம் மிகும்படி, அழகு தோற்றும்படி) முப்பத்து மூவர் முருகனைக் காணத் தேவலோகத்திலிருந்து ஒரு பெரிய கூட்டமே வந்து கொண்டிருக்கிறது. முன்னலே முனிவர் களையும் கந்தர்வர்களேயும் பிறரையும் விட்டுப் பின்னே திருமாலும் சிவபிரானும் இந்திரனும் வருகிருர்கள். அவர் களுக்குப் பின்னலும் பெருங்கூட்டம் வருகிறது. தலைவர் கள் உலா வருவதாக இருந்தால் வாத்திய கோஷ்டி முன்னல் போகும். விருதாவளிகளை எடுப்பவர்களும் போவார்கள். பிறகு தலைவர்கள் செல்வார்கள். அவர் களுக்குப் பின்னே அதிகாரிகளும் தொண்டர்களும் செல் வார்கள். அவ்வாறே இந்தக் கூட்டமும் அமைந்திருக் கிறது. முன்னும் பின்னும் பெருங்கூட்டம் வர, நடுவிலே மூன்று செல்வர்களும் வருகிருர்கள்.