பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஆவினன்குடி 209 மூன்று பேர்கள். அவர்களும் நான்கு பிரிவாக உள்ளவர் கள். ஆதித்தர்கள் பன்னிரண்டு பேர்கள்; துவாதசாதித்தி யர்கள் என்பர். ருத்திரர்கள் பதினெருவர்; ஏகாதசருத்திரர். எட்டுத் திசைகளையும் பாதுகாவல் செய்யும் வசுக்கள் எண்மர். தேவலோக வைத்தியர்களாகிய அசுவினி தேவர்கள் இருவர். ஆக, தேவலோகத்தில் பேரதிகாரிக ளாக இருக்கும் தலைவர்கள் முப்பத்து மூவர். தேவர்கள் ஒளி படைத்த திருமேனியை உடைய வர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூரியனைப் போன்ற தேசு பெற்றவர்கள். அவர்கள் மேலே சொன்ன மூன்று பெருந்தலைவர்களையும் பின்பற்றி வருகிரு.ர்கள். பகலின் தோன்றும் இகல்இல் காட்சி கால்வேறு இயற்கைப் பதினெரு மூவரொடு. (சூரியனைப் போலத் தேசுடையவர்களாகத் தோன்றும் மாறுபாடு இல்லாத தோற்றத்தைப் பெற்ற நான்கு வேறு பட்ட இயற்கையையுடைய முப்பத்து மூவரோடு-பிறரும் வருகிருர்கள் என்று சொல்ல வருகிருர்) நச்சினர்க்கினியர். பகலில் தோன்றும் இகலில் காட்சி என்பதற்கு வேறு ஒரு பொருள் கூறுகிருர். ஒரு பொருள் பலவாறு பகுத்துக் காண்டற்கண் வேறுபடத் தோன்றும் தம்முள் மாறுபாடு இல்லாத அறிவினை யுடைய' என்பது அவர் உரை. பகல் என்பதற்குப் பகுத்துக் காணுதல் என்றும், காட்சி என்பதற்கு அறிவு என்றும் அவர் பொருள் கொண்டார். பொருள்களின் உண்மையை ஆராயும்போது அவர்கள் முப்பத்து மூன்று பேரும் ஒரே மாதிரியான முடிவுக்கு வருவார்களாம். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு (இகல்) இராதாம். திரு-14 -