பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஆவினன்குடி 211 விஞ்சையர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், யூதர், பைசாசர், தாராகணம், காகர், ஆகாசவாசிகள், போக பூமி யோர் என்று கூறுவார். பிறவாறும் உரைப்பர் என்று அவரே எழுதியுள்ளார். இந்தப் பதினெண் கணத்தைப் பற்றிய செய்தி புற கானூற்றிலும் வருகிறது. அந்நூலின் கடவுள் வாழ்த்தில் சிவபெருமான் அணிந்திருக்கும் பிறையைப் பதினெண் கணத் தினரும் துதித்து வழிபடுகிருர்கள் என்று பாரதம் பாடிய பெருதேவனர் பாடுகிருர். 'அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே” என்பது அப்பகுதி. அதன் உரையாசிரியர், பதினெண் கணங்களாவார்: தேவரும் அசுரரும் முனிவரும் கின்னரரும் கிம்புருடரும் கருடரும் இயக்கரும் இராக்கதரும் கந்தரு வரும் சித்தரும் சாரணரும் வித்தியாகரரும் காசரும் பூதமும் வேதாளமும் தாராகணமும் ஆகாசவாசிகளும் போக பூமி யோரும் என இவர். பிறவாறும் உரைப்பர்’ என்று எழுதினர். சிலப்பதிகாரத்தில் இந்திர விழவூர் எடுத்த காதையில் காவிரிப் பூம்பட்டினத்தின் விழாக்காட்சிகளே இளங்கோவடி கள் வருணிக்கிருர், எல்லாத் தெய்வங்களுக்கும் சிறப்பு கடைபெறுகிறதாம். முப்பத்து மூன்று தேவர்களுக்கும் பதினெட்டுக் கணங்களுக்கும் விழா எடுக்கிருர்களாம். "நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும் பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து வேறுவேறு கடவுளர் சாறுசிறந் தொருபால்.’