பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 திருமுருகாற்றுப்படை விளக்கம் இங்கே வரும் மூவறு கணங்களுக்கு வகை கூற வந்த அடியார்க்கு கல்லார் இரண்டு பழைய வெண்பாக்களே மேற். கோளாகக் காட்டுகிருர், அவை வருமாறு: 'கின்னரர் கிம்புருடர் விச்சா தரர்கருடர் பொன்னமர் பூதர் புகழியக்கர்-மன்னும் உரகர் சுரர்சா ரணர்முனிவர் மேலாம் பரகதியோர் சித்தர் பலர்.' காந்தருவர் தாரகைகள் காணுப் பசாசகணம் ஏந்துபுகழ் மேய இராக்கதரோ-டாய்ந்ததிறல் போகா இயல்புடைய போகபுவி யோருடனே ஆகாச வாசிகளா வார்.'

  • 4

தொல்காப்பியப் பொருளதிகார உரையில் பேராசிரியர், பேயும் பூதமும் பாம்பும் ஈருகிய பதினெண்கணம்' என்றும், தக்கயாகப் பரணி உரையாசிரியர், பதினெண்கணங்களா வன தேவகணம், பிதிரர்கணம் முதலியன என்றும் எழுதுவர். முப்பத்து மூன்று தேவர்களும் அவர்களுக்குப்பின் பதி னெண் கணத்தினரும் ஆவினன்குடி முருகனைத் தரிசிக்க வருகிருர்கள். இந்தப் பெருங் கூட்டத்தில் உள்ளவர்களைத் தனித்தனியே அடையாளம் காட்ட முடியுமா? ஆகவே பொதுவாக அவர்களைப் பற்றிய சில செய்திகளைச் சொல் கிருர் நக்கீரர். எல்லோரும் ஒளியுடைய மேனி படைத்தவர்கள். வானத்தில் கணக்கில்லாத கட்சத்திரங்கள் மினுக்கு மினுக் கென்று காட்சி தருவதைப் போல அவர்கள் விளங்கு கிருர்கள். கணக்குக்கு வாராத கூட்டம்; ஒளி படைத்த மேனியையுடைய கூட்டம். அந்த இரண்டுக்குமே நட்சத்தி ரங்கள் உவமையாகின்றன.