பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஆவினன்குடி - 213. மீன்பூத் தன்ன தோன்றலர். (விண்மீன்கள் ஒளியுடன் விளங்குவதைப் போன்ற தோற்றத்தை உடையவர்கள்.) அவர்கள் முருகனைக் காணவேண்டும் என்ற ஆர்வத் தோடு வருகிருர்கள்; தலைவர்களோடு சேர்க்தி போனல் தான் தரிசனம் கிடைக்கும்; பின் தங்கி விட்டால் கிடைக் காமல் போனலும் போகும். ஆதலால் மிக்க வேகமாக வருகிருர்கள். மீன்கள் நிரம்பிய இடமாகிய கடலின்மேலே காற்று வீசிற்ைபோன்ற வேகத்தை யுடையவராக அவர்கள் வருகிருர்களாம். மீன்சேர்பு வளிகிளர்க் தன்ன செலவினர். (மீன்கள் உலாவுகின்ற இடத்தைச் சேர்ந்து காற்று. எழுந்தால் ஒத்த வேகமான நடையை யுடையவர்கள். மீன்: ஆகுபெயர்.1 - இவ்வாறு வருகிறவர்கள் பெரிய வலிமையை உடை யவர்கள். ஏழைகள் மெலிவுடன் பணக்காரர்களைத் தேடிச் செல்வது போல வரவில்லை. பணக்காரர்கள் அரசியல் அதி காரிகளைப் பார்க்க வருகிறது போல வருகிருர்கள். பணக் காரர்களாக இருந்தால் என்ன? அரசியல் ஆணைக்கு முன் எம்மாத்திரம்? - - ~ இங்கே வருகிறவர்கள் இயல்பாகவே பெருவலிமையை உடையவர்கள். காற்றும் நெருப்பும் கலந்து அடித்தால் அவற்றின்முன் ஏதாவது சிற்க முடியுமோ? அந்தத் தியைப் போன்ற வலிமையை உடையவர்கள். - வளியிடைத் தீஎழுக் தன்ன திறலினர். (காற்று வீசும் பொழுது தி எழுந்தாற் போன்ற வலி மையை உடையவர்கள்.) . - -