பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 திருமுருகாற்றுப்படை விளக்கம் வேகமாகப் போ!' "என்ன இப்படித் தள்ளுகிருய்?" "அதோ நம் தலைவர் எவ்வளவு தூரம் முக்திப் போய் விட்டார்! நீ மெல்ல நகருகிருயே' 'சரிதான், போ.' இப்படி வேகமாகப் போகும் கூட்டத்தில் மக்கள் பேசுவதை காம் கேட்டிருக்கிருேம். ஆவினன்குடிக்கு யாத் திரை வரும் இந்தக் கூட்டத்தினரும் பேசிக் கொள்கிருர்கள். பேச்சா அது? இடிக்குரல் அல்லவா? எல்லோருக்கும் முன்பே போகவேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் ஆத்தி ரம். பெருங்கூட்டத்தில் உரத்துப் பேசில்ைதானே காது. கேட்கும்? அதனல் அவர்கள் உரக்கக் குரல் கொடுக் கிருர்கள். கெருப்புப் பிறக்கும்படி மேகங்கள் மோதி இடி இடிக்கிறது போல இருக்கிறது அவர்களுடைய குரல். - தீப்பட உரும்இடித் தன்ன குரலினர். (கீ உண்டாகும்படியாக இடி இடித்தாற் போன்ற குரலையுடையவர்களாகி-வருகிருர்கள்.) நான்முகனேச் சிறை மீட்க வேண்டுமென்ருல் தலைவர் கள் மாத்திரம் சென்ருல் போதாதோ? இவர்கள் ஏன் போக வேண்டும்: 3. அரசாங்கத்தினால் ஏதேனும் ஒரு காரியம் ஆக வேண்டு மாளுல் சில தலைவர்கள் மட்டும் கையெழுத்திட்டு விண்ணப் பம் அனுப்பவதில்லை. அந்தக் காரியம் மிகவும் அவசிய மானது, அவசரமானது என்பதைக் காட்டுவதற்காகப் பொது மக்களுடைய கையெழுத்துக்களையும் வாங்கி அனுப்பு