பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஆவினன்குடி 215 வார்கள். தலைவர்கள் மட்டும் கையெழுத்திட்டு அனுப்பும் மனுவைவிட இந்த மனுவுக்கு வலிமை அதிகம். அவ்வாறே இங்கே தாம் சாதிக்க விரும்பிச் செல்லும் காரியத்திலே பல ருக்கும் சிரத்தை உண்டு என்று காட்டும் பொருட்டு, இத்தனே கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு வருகிருர்கள் பெருந்தலைவர்கள். அதோடு, அவரவர்களுக்கு முருகனைத் தரிசனம் செய்ய வேண்டும் என்றும் ஆசை. இந்தச் சமயத்தில் அதனை எளிதில் விறைவேற்றிக் கொள்ளலாம் என்று புறப்பட்டி ருக்கிருர்கள், அன்றியும் அவரவர்களுக்கே உரிய சில குறைகளும் உண்டு. அவற்றையும் முருகனிடம் விண்ணப் பித்துக் கொள்ளலாமே, இதை நக்கீரர் சொல்கிருர், விழுமிய -pఅణp மருங்கில்தம் பெறுமுறை கொண்மார் அக்தரக் கொட்பினர் வந்துடன் காண. (எல்லோருக்கும் பொதுவாக உள்ள பெரிய குறையைத் தீர்த்துக்கொள்வதோடு, அதன் சார்பில் தாம் பெறவேண்டி யவற்றைத் தங்கள் தங்கள் முறையிலே கின்று பெற்றுக் கொள்ளும் பொருட்டு (மேலே சொன்ன யாவரும்) ஆகா யத்தே இயங்கிக் கொண்டு வந்து ஒருங்கே தரிசனம் செய்து கொள்கிருர்கள். அப்படி அவர்கள் தரிசித்துக் கொள்ளும் படி-முருகன் ஆவினன் குடியில் எழுந்தருளியிருக்கிருன் என்று சொல்ல வருகிருர். விழுமிய-மேலான குறை-காரியம். மருங்கில்சார்பில் கொண்மார்-கொள்ளும் பொருட்டு. அந்தரக் கொட்பினர்-ஆகாசத்தில் சுழன்று வருகிறவர்கள். உடன் - ஒருங்கே.)