பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 திருமுருகாற்றுப்படை விளக்கம் தங்களுக்கு உற்ற காரியங்களில் மேலானது, யாவ ருக்கும் பொதுவானது, விழுமிய குறை, நான்முகனேச் சிறை யினின்றும் விடுவிப்பது, அதனை விழுமிய உறு குறை’ என்ருர், "நான்முக ஒருவற் சுட்டியது அது. ஆனல் அதற்குமேல் அதனைச் சார்ந்து தாம் பெற வேண்டிய முறை யான சில குறைகளும் அவர்களுக்குத் தனித்தனியே உண்டு. அவற்றையும் சிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணத் தோடு வருகிருர்களாம். இந்தப் பெருங் கூட்டம் வந்து தரிசித்துக் கொள்ளும் படி முருகன் திருவாவினன்குடியில் எழுந்தருளியிருக்கிருன்; தேவசேனேயம்மையாருடன் எழுந்தருளியிருக்கிருளும். முதலிலேயே அந்தப் பெருமாட்டியை, "மறுவில் கற்பின் வாணுதல்” என்று குறிப்பிட்டதைப் பாாத்தோம். களவுக்காதல் இல்லாமலே கற்புக் காதல் செய்த பிராட்டி யாத லின் அவ்வாறு சொன்னர். இங்கும் அப்படியே சொல்லுகிருர். "கேடு இல்லாத பதிவிரதத்தையுடைய மடங்தை' என்கிரு.ர். தாவில் கொள்கை மடங்தையொடு சின்னுள் ஆவினன்குடி அசைதலும் உரியன்; அதாஅன்று. (கேடு இல்லாத விரதத்தையுடைய மடங்தையாகிய தேவசேனயோடு சில காலம் திருவாவினன்குடியில் தங்கி யிருக்கும் செயலேயும் உடையவன்; அது மட்டும் அன்று.) கொள்கையென்பது கடைப்பிடி அல்லது விரதத்தைக் குறிக்கும்; இங்கே பதிவிரதமாகிய கற்பைக் குறித்தது. கற்புமணப் பிராட்டியாகிய தேவகுஞ்சரியுடன் சில காலம் திருவாவினன்குடியில் முருகன் எழுந்தருளியிருப்பான் என்று மூன்ருவது படைவீட்டைச் சொல்லி விட்டு, அடுத்த படை வீட்டைச் சொல்லத் தொடங்குகிருர் நக்கீரர்.