பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஆவினன்குடி 217 பகலின் தோன்றும் இகல்இல் காட்சி கால்வேறு இயற்கைப் பதினெரு மூவரொடு ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர், மீன்பூத் தன்ன தோன்றலர், மீன்சேர்பு வளிகிளர்க் தன்ன செலவினர், வளியிடைத் தீஎழுத் தன்ன திறலினர், தீப்பட உரும்இடித் தன்ன குரலினர், விழுமிய உறுகுறை மருங்கில்தம் பெறுமுறை கொண்மார் அக்தரக் கொட்பினர் வந்துஉடன் காணத் தாவில் கொள்கை மடந்தையொடு சின்னுள் ஆவி னன்குடி அசைதலும் உரியன்;அதாஅன்று. ஆவினன்குடியும் பழனியும் 'திருவாவினன் குடியென்பது, இன்று பழனியென்று புகழ்பெற்று விளங்கும் தலம். இப்போது மலைமேலுள்ள திருக்கோயிலைப் பழனியென்றும், அடிவாரத்திலுள்ள திருக்கோயிலைத் திருவாவினன்குடி யென்றும் வழங்கு கின்றனர். நகருக்கும் பழனியென்ற பெயரே இப்போது வழங்குகிறது. - பழங்காலத்தில் அந்த ஊருக்கு ஆவினன்குடி என்று பெயர். ஆவியர்குடி என்பது குறுநில மன்னர்களின் குடி களில் ஒன்று. அவர்கள் அரசாண்டு வந்த இடம் இது. கடையெழு வள்ளல்களில் ஒருவனகிய பேகன் இந்தக் குடியில் தோன்றியவன். வையாவிக் கோப்பெரும் பேகன் என்பது அவன் முழுப்பெயர். ஆவி, வையாவி என்னும் இரண்டும் அக்குடிக்கு உரிய பெயர். அவர்கள் வாழ்ந்த இடத்தை ஆவினன்குடி என்றும் வையாவியூர் என்றும் வழங்கினர். வையாவிபுரி என்றும் கூறுவதுண்டு. பழனியின்