பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 திருமுருகாற்றுப்படை விளக்கம் மற்ருெரு பெயராகிய வையாபுரி என்பது வையாவிபுரி என்பதன் திரிபேயாகும். நாளடைவில் வையாவிபுரி வையா இழர் ஆகி அதை உள்ளிட்ட காடு வைகாவூர் நாடு என்று ஆகிவிட்டது."வைகாவூர் கனடதில் ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே' என்று இந்த காட்டையும் ஊரையும் அருணகிரியார் பாடுகிருர், பொதினி என்பது பிறகு பழனியென்று மருவியது. பழங்காலத்தில் மலையின்மேலும் கோயில் இருந்தது என்று. சங்க நூல்களால் தெரிய வருகிறது. பேகனுடைய குல தெய்வம் முருகன். பிற்காலத்தில் பழனிக்குப் புராணம் ஒன்று எழுத்தது. திருவாகிய இலக்குமியும், ஆவாகிய காமதேனுவும், இனன. கிய கதிரவனும் பூசித்தமையால் திருவாவினன் குடி என்று பெயர் வந்ததென்றும், தம்மை வலம் வந்த விநாயகருக்குச் சிவபெருமான் மாங்கனியைக் கொடுத்து விட்டு உலகை. வலம் வந்த முருகனுக்குக் கொடுக்காததனால் அவன் சினந்து. இம்மலைமேல் வந்து கிற்க, அவனைத்தேடிவந்த சிவபெருமான்,. 'பழம் நீயே" என்று கூற, அதுவே காரணமாக மலைக்குப் பழம் நீ என்று பெயர் வந்தது, அதுவே பழகியாயிற் றென்றும் புராணம் கூறும். . . . . . . . . . மலேயின்மேலும் அடிவாரத்திலும் திருக்கோயில்கள் இருப்பதைத் திருச்செங்கோடு, திருக்கழுக்குன்ாம் முதலிய இடங்களில் காணலாம். அவ்வாறு திருவாவினன்குடியாகிய பழனியம்பதியிலும் இருக்கின்றன.

  • நான் எழுதிய "பழம்பழனி' என்ற கட்டுரையைக் காண்க. (பெரும் பெயர் முருகன் என்ற நூல்)