பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 திருமுருகாற்றுப்படை விளக்கம் தலைச்சங்கத்திலிருந்து தமிழ் பாடியவர்கள் என்று ஒரு வரலாறு உண்டு. அதர்வவேதமும் ஆறு சாஸ்திரங்களும் தர்மசாஸ்திரமும் ஆகியவை இடையாய ஒத்து; மத்திய நிலையில் உள்ள நூல்கள். அகத்தியம், தொல்காப்பியம் என்னும் இலக்கணங்களும் இடைச்சங்கத்தார் இயற்றிய நூல்களும் இடையாய ஒத்து என்பர். இதிகாச புராணங்களும் மறுப்பு நூல்களும் கடையாய ஒத்து; சடைச் சங்க நூல்களையும் இந்த வரிசையில் சேர்ப்பார் ாச்சிஞர்க்கினியர். இந்த மூன்று வகை நூல்களிலும் சிறந்த பயிற்சி உள்ளவன் ஒதற்சிறப்புடைய அந்தணன். ஒதுவித்தலாவது தக்கவர்களுக்கு மேலே சொன்ன நூல்களைக் கற்பித்தல், ஒதுவித்தலாவது கொள்வோன் உணர்வுவகை அறிந்து அவன் கொள்வரக் கொடுக்கும் ஈவோன் தன்மையும் ஈதல் இயற்கையுமாம் என்று விளக்குவார் கச்சினர்க்கினியர். வேட்டல் என்பது வேள்வி செய்தல். காள்தோறும் செய்யும் வேள்விகளும் அவ்வப்போது செய்யும் வேள்வி களுமாக அவை பலவகைப்படும். வேள்வி செய்வதால் தேவர்கள் மனமகிழ்ந்து மழை பெய்வித்தல் முதலிய கன்மைகளேச் செய்வார்கள் என்று பழங்காலத்தினர் கம்பினர்கள். வேட்பித்தல் என்பது, பிறர் வேள்வி செய்ய அதற்குத் தாம் வழி காட்டியாக இருந்து கடப்பித்தல். கோடல் என்பது தக்காரிடம் தானம் பெறுதல். கொடுத்தல், தக்கவர்களுக்குத் தானம் வழங்குதல். 'ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல் ஈதல் ஏற்றல் ஆறுபுரிந் தொழுகும் அறம்புரி அந்தணர்' . . . . (பதிற்றுப்பத்து. 24) என்று சங்கப் புலவர் ஒருவர் பாடுகிருர், .جی . -