பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம் 223 ஏரகத்தில் உறையும் அந்தணர்கள் இந்த ஆறு தொழில்களேயும் வழுவாமற் செய்பவர்கள். அந்தணர்களுக்குக் கோத்திரமும், சூத்திரமும் உண்டு. கோத்திரம் என்பது கெளசிக கோத்திரம், பாரத்துவாச கோத்திரம் என்பனபோல வழிவழி வந்த குடியின் அடை யாளம். சூத்திரம் என்பது ஆபஸ்தம்பம், ஆசுவலாயனம், திராஹ்யாயனம் என்பன போலத் தாம் செய்யும் கர்மாக் களுக்கு வழிதுறை வகுக்கும் நூலைச் சொல்வது. ஒரு கோத் திரத்திற் பிறந்தவர்கள் அதே கோத்திரத்தில் பிறந்தவர்களை மணம் புரிந்து கொள்ளமாட்டார்கள். ஆதலின் தங்தை ஒரு கோத்திரமானல் தாய் வேறு கோத்திரமாக இருப்பாள் மணமகனுக்கும் மணமகளுக்கும் தனித்தனியே கோத் திரங்கள் இருப்பதைத் திருமணத்தில் கூறுவார்கள். பிதிர்க்கடன் இறுக்கும்பொழுது தங்தை தாய் பிறந்த இருவேறு கோத்திரத்தையும் சுட்டிக் கடன் இறுப்பார்கள். கோத்திரத்தால் வேறுபட்ட தாய் தந்தையர்களின் குடிவேறு வேருக இருக்கும். இப்படிப் பல கோத்திரங்கள் உண்டு. மிகப் பண்டைப் பழங்காலம் முதலே இந்த அந்தணுளர் திருவேரகத்திலிருந்து முருகனை வழிபட்டு வருகிருர்கள். தமக்கு வேண்டியனவெல்லாம் குறை வின்றிக் கிடைப்பதால் ஊரை விட்டுப் போகாமல் வாழ் கிருர்கள். "பதியெழு வறியாப்பழங்குடி' என்று பழைய நூல்கள் கூறும். அவ்வாறு வாழும் தொல்குடி அந்தணர் இவர்கள். இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி. "தந்தை தாய் என்னும் இருவருக்கும் உரிய கோத்திரமாகத் தனித்தனியே இரண்டு முனிவர்களைச் சுட்டிக் கூறும் பலவாக வேறுபட்ட பழைய குடி’