பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 திருமுருகாற்றுப்படை விளக்கம் காலத்தும் மத்தியான்ன காலத்தும் அத்தமன காலத்தும் தாபனம், அநுட்டானம், பூசை ஆகிய மூன்று தொழிலயும் முயன்று செய்ய என்று ஒரு பழைய உரைகாரா உரை எழுதுகிருர். . இங்கே உள்ள அந்தணரின் இயல்புகளைப் பழம் புலவர் கள் பல இடங்களில் கூறியுள்ளனர். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில், 'ஒன்று புரி கொள்கை இருபிறப் பாளர் முத்திச் செல்வத்து நான்மறை முற்றி ஐம்பெரு வேள்வியும் செய்தொழில் ஒம்பும் அறுதொழில் அந்தணர்' (கட்டுரை காதை) என்று கூறுவர். வழிபடும் முறை இப்படித் துதித்து வழிபடும் அந்தணர்கள் முருகனு டைய ஷடrர மந்திரத்தை ஜபித்து வேத மந்திரங்களைக் கூறி மலரை ஏந்தி அருச்சிக்கிருர்கள், மந்திரபுஷ்பம் சமர்ப் பிக்கிருர்கள். இதை அடுத்தபடி சொல்கிருர் நக்கீரர். இந்த அந்தணர் மூன்று முப்புரி நூல்களே அணிந்திருக் கிருர்கள். பிரமசாரியானல் மூன்று புரிகளே மாத்திரம் அணிந்திருப்பார்கள். இவர்கள் இல்வாழ்வார்; மூன்று புரிகள் சேர்ந்த நுண்ணிய பூனூல்கள் மூன்றை அணிந்திருக் கிருர்கள்; எல்லாம் சேர்ந்து ஒன்பது இருக்கின்றன. நீராடி வந்தவர்கள் ஆடையை உலர்த்தாமல் ஈரமாகவே உடுத்திருக்கிருர்கள். அது இடையில் இருந்தபடியே உலருகிறது. ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண். புலராக் காழகம் புலர உடி.இ. .